மூடிய காருக்குள் இளைஞர் மடியில் அமந்திருந்த துணை நடிகையை வெளியே வரச் சொன்ன போலீசுக்கு பளார் என கன்னத்தில் ஒரு அறை விழுந்தது.
மூடிய காருக்குள் இளைஞர் மடியில் துணை நடிகை! வெளியே வரச் சொன்ன போலீசுக்கு பளார்!

சென்னை கிண்டி ஐடிசி கிராண்ட் ஓட்டல் அருகே போலீசார் நேற்று முன் தினம் இரவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டதுடன் வாகனத்தை ஓட்டி வருபவர்கள் போதையில இருக்கிறார்களா எனவும் சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக சொகுசு கார் ஒன்று வந்தது. காரை நிறுத்திய அதிகாரிகள் டிரைவரை சோதனையிட்டனர். அப்போது அவர் போதையில் இருந்துள்ளார். இதனால் காரில் இருந்த அனைவரையும் வெளியே வருமாறு போலீசார் கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் வர மறுத்துள்ளனர். அப்போது பெண் ஏட்டம்மா ஒருவர் கார் கதவை திறந்து பார்த்துள்ளார்.
அப்போது உள்ளே இளைஞர் ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் மடியில் பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் யார் என்று பார்த்த போது சினிமாவில் கதாநாயகிகளுக்கு தோழியாக நடிக்கும் துணை நடிகை என்று தெரிந்தது. அவரை காரை விட்டு வெளியே வருமாறு ஏட்டம்மா கூற, அவர் மறுத்துள்ளார்.
பின்னர் ஒரு கட்டத்தில் துணை நடிகை வெளியே வர அவரும் போதையில் இருந்துள்ளார், தான் ஒரு நடிகை என்றும் தன்னை எப்படி காரில் இருந்து வெளியே வரச் சொல்லலாம் என்றும் அவர் ஏட்டம்மாவிடம் எகிறியுள்ளார். இதனால் கடுப்பான ஏட்டம்மா டிரைவர் மீது டிரன்க் அன்ட் டிரைவ் வழக்கு போட்டு காரை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்தார். இதனால் வாக்குவாதம் முற்றவே துணை நடிகைக்கு பளார் என ஒரு அறையை ஏட்டம்மா விட சற்றும் தாமதிக்காமல் துணை நடிகையும் ஏட்டம்மா கன்னத்தில் பளார் என அறை விட்டுள்ளார்.
மோதல் முற்றவே பெண் போலீசுக்கு காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் துணை நடிகையின் காதலன் பெண் ஏட்டம்மாவிடம் மன்னிப்பு கோரினார். இதனை தொடர்ந்து பிரச்சனை முடிவுக்கு வந்தது.