தீவிர அரசியலில் இருந்து விலகியிருப்பதற்காக ரஜினி மீண்டும் சினிமா அவதாரம் எடுக்கிறார். இதோ அடுத்த படத்திற்கு ஸ்டில்.
ரஜினி புது ஸ்டில்! புது ஸ்டைல்! சூட்டிங் விரைவில் ஆரம்பம்! பி.ஜே.பிக்கு எச்சரிக்கையா?

லைக்கா தயாரிப்பில் வெளியான ரஜினியின் 2.0 படம் படு மோசமான கலெக்ஷன். ஊரெல்லாம் நல்ல வசூல் என்று பேசிக்கொண்டாலும் உண்மை அது அல்ல என்று ரஜினியிடம் கெஞ்சியது லைக்கா. அதனாலே மீண்டும் ஒரு படம் லைக்காவுக்கு ஒப்பந்தமானார் ரஜினி. இந்தப் படத்தை ஏஆர்முருகதாஸ் இயக்க இருப்பதாக தெரியவந்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் தன்னை அரசியலில் இறங்குமாறு பா.ஜ.க. தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காகவே புதிய பட அறிவிப்பை வெளியிட்டு, விரைவில் சூட்டிங் கிளம்ப இருக்கிறாராம். பிப்ரவரி 10, 11. 12 ஆகிய தேதிகளில் மகள் திருமணம் முடிந்தவுடன் வெளிநாடு செல்லும் ரஜினி திரும்ப வந்தவுடன் தீவிர சூட்டிங்கில் இறங்குகிறாராம்.
அதற்கு முன்னோட்டமாகவே புது ஸ்டில்லை வெளியிட்டுள்ளார். ரஜினி 166 என்று வெளியாகியிருக்கும் இந்தப் படத்தில் மரண மாஸாக போஸ் கொடுத்திருக்கிறார் ர்ஜினி. இது ஒரு டான் கதை என்பதை இந்தப் புகைப்படமே சொல்லிவிடுகிறது. இது தன்னை மற்ற கட்சியினர் நெருங்கக்கூடாது, நெருக்கக்கூடாது என்பதற்கான கட்டளையாம்
ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து இளவரசன் வெளியேறிய நிலையில், மீண்டும் ராஜு மகாலிங்கத்தை கொண்டுவரவும் ரஜினி திட்டமிட்டு உள்ளாராம். ஆக, அடுத்த படத்துக்கு தயாராகுங்க ரசிகாஸ்,
இப்படி எல்லாம் தகவல் வெளியான நிலையில்படக்குழு ஒரு விளக்கத்தை அளித்துள்ளது. ரஜினி 166 என்று வெளியாகியிருப்பது அதிகாரப்பூர்வமான புகைப்படம் அல்ல என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.
ரசிகர் ஒருவர் அன்பின் வெளிப்படாகா இதனை வெளியிட்டிருப்பதாக படக்குழு கூறியுள்ளது. இதனால் ஏற்பட்ட மகிழ்ச்சி ரசிகர்களை சட்டென பறந்து போனது.