பா.ஜ.க.வுக்கு சூப்பர் வெற்றி கிடைக்குமாம்! இரு மாநிலத்தில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள்!

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின் படி. மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் பாஜகவுக்கு மிகப்பெரிய வெற்றி வாய்ப்பு உள்ளது என பல்வேறு ஊடகங்களின் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.


அதன்படி மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் இன்னும் வலுவாக பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

கடந்த 21ம் தேதி மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களைத் தவிர நாடு முழுவதும் 51 சட்டசபை இடைத்தேர்தல்களும், இரண்டு மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களும் நடைபெற்றன.

அதன்படி மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக சிவசேனா கூட்டணி எளிதில் வெற்றி பெறும் என்றும் ஹரியானாவிலும் பாஜக ஒரு மகத்தான வெற்றியை நோக்கி நகர்கிறது என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிராவில் பாஜக சிவசேனா கூட்டணி 206 இடங்களும், ஹரியானாவில் பாஜகவுக்கு 68 இடங்களும் கிடைக்கும் என நேதா ஆப் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளது.

சி.என்.என் நியூஸ் 18-ஐ.பி.எஸ்.ஓ.எஸ் கருத்துக் கணிப்புகளின்‌படி பாஜக-சிவசேனா கூட்டணி 243 இடங்களை பிடிக்கும் என்றும் கூறியுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக சிவசேனா கூட்டணி மகாராஷ்டிராவின் 48 மக்களவை இடங்களில் 41 இடங்களையும், காங்கிரஸ் ஒன்று மற்றும் என்சிபி நான்கு இடங்களையும் வென்றது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மொத்தம் 288 தொகுதிகளில், முதன்மையான போட்டியாக பாஜக தலைமையிலான கூட்டணி 'மகாயூதி' என்றும். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 'மகா அகதி'என்றும்‌ அழைக்கப்படுகிறது.  

ஹரியானாவில், முதலமைச்சர் மனோகர் லால் கட்டர் தலைமையிலான பாஜக தலைமையிலான கூட்டணி மொத்தமுள்ள 90 இடங்களில் 75 இடங்களை வெல்லும் முனைப்புடன் தேர்தல் யுக்தியுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டது.

2014 சட்டமன்றத் தேர்தலில் 47 இடங்களை வென்று முதல் முறையாக ஹரியானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த மாநிலத்தில் பாஜகவுக்கு 63 இடங்களும், காங்கிரஸ் 16 இடங்களும், பொது வேட்பாளர்கள் 11 இடங்களையும் பெறுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370 வது பிரிவை ரத்து செய்தது என. எதிர்க்கட்சியினர் பொருளாதார மந்தநிலை, வேலை இழப்புகள் மற்றும் விவசாய நெருக்கடி ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி இந்த தேர்தலை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மணியன் கலியமூர்த்தி