தலை மேலயும் ஒன்னுமில்ல! தலைக்கு உள்ளேயும் ஒன்னமில்ல! ரஜினியை பங்கமாக கலாய்த்த சீமான்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைமீதும் ஒன்றுமில்லை தலைக்கு உள்ளேயும் ஒன்றுமில்லை என்று கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.


தற்போது நடிகர் ரஜினிகாந்த் தர்பார் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக மும்பையில் உள்ளார். மும்பை புறப்படுவதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி நதிகள் இணைப்பு எனும் பாஜகவின் தேர்தல் அறிக்கையை தான் வரவேற்பதாக கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து ரஜினி பாஜகவின் தேர்தல் அறிக்கையை முழுமையாக ஆதரித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பாக வருகிறது.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் சீமான் மன்னார்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது நதிகள் இணைப்பு என்பது சாத்தியமில்லாத ஒரு விஷயம் என்று சீமான் தெரிவித்தார். நதியில் தடுப்பு அணை கட்டினால் கூட நிலம் போல் ஆகிவிடும் என்றும் எனவே நதியை இணைப்பது என்பது பேராபத்தை என்றும் சீமான் தெரிவித்தார்.

ஆனால் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்பு என்று கூறியுள்ளது நகைப்பை ஏற்படுத்துவதாகவும் சீமான் கூறினார். இந்தத் தேர்தல் அறிக்கையை ரஜினி ஆதரித்து இருப்பது பெரிய விஷயமில்லை என்று சீமான் தெரிவித்தார். ஏனென்றால் ரஜினி ஒரு நடிகர் அவரை இயக்கும் இயக்குனர் மோடி. இயக்குனர் என்ன கூறுகிறாரோ அதைத்தானே ரஜினி செய்வார் என்று தெரிவித்தார் சீமான்.

இதன்மூலம் ரஜினி தலைக்கு மேலேயும் ஒன்றுமில்லை தலைக்கு உள்ளேயும் ஒன்றும் இல்லை என்பது தெரிய வந்துள்ளதாக சீமான் கலாய்த்துள்ளார். அதாவது ரஜினி தலையில் முடி இல்லை என்பதையும் அவர் தலைக்குள் மூளை இல்லை என்பதையும் சீமான் கூறியிருப்பது அவரது ரசிகர்களை எரிச்சலடைய வைத்துள்ளது.