எப்போதும் சன்னி லியோன் நினைப்பு தான்! வசமாக சிக்கிய அர்னாப்!

தேர்தல் முடிவுகளை அறிவிக்கும்போது சன்னி தியோல் என்பதற்குப் பதிலாக, சன்னி லியோன் என்று அர்னாப் கோஸ்வாமி உளறிய விசயம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.


பிரபல பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி தனது பகட்டான பேச்சுக்கு பெயர் பெற்றவர் ஆவார். இவர், வெளிப்படையாகவே பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் செயல்படுவதுடன், அதற்காகவே ரிபப்ளிக் டிவி என்ற பெயரில், தனியாக செய்தித் தொலைக்காட்சி ஒன்றையும் தொடங்கி நடத்தி வருகிறார். இந்நிலையில், மக்களவைத் தேர்தல் முடிவுகளை அவர் நேரலையில் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென பாஜக வேட்பாளரும், பாலிவுட் நடிகருமான சன்னி தியோல் பற்றிய முன்னிலை விவரத்தை அர்னாப் கோஸ்வாமி சொல்ல நேரிட்டது. ஆனால், அவர் தவறுதலாக, சன்னி லியோன், இத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார் என்று சொல்லிவிட்டார். பின்னர் தனது பேச்சை அவர் சரிசெய்துகொண்டார். 

எனினும், அர்னாப் பேசியதை சமூக ஊடகங்களில் பலரும் கேலி செய்து, பதிவிட தொடங்கியுள்ளனர். சன்னி லியோன் எத்தனை ஓட்டுகள் வாங்கினார் என்று கேட்டு பல்வேறு கேலி பதிவுகள் பகிரப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, மேன்ஃபோர்ஸ் காண்டம்ஸ் கம்பெனி, தனது ட்விட்டர் பக்கத்தில், சன்னி லியோனை டேக் செய்து, எத்தனை ஓட்டுகள் வாங்கினாலும் எங்களை மனதில் வைத்துக் கொள்ளுங்கள், உங்களுக்கு ஒருபோதும் சோர்வு ஏற்படாது, என்று கேலி செய்துள்ளது. ஆனால், இதற்கு சன்னி லியோன் எந்த பதிலும கூறவில்லை.

ஆபாச படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன் தற்போது பாலிவுட் நடிகையாக வலம் வருகிறது. அவர், மேன்ஃபோர்ஸ்ட் காண்டம்ஸ் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.