ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க் லீவ்? உண்மைய தெரிஞ்சுக்கோங்க!

ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க் விடுமுறை என்று வெளியாகி வரும் தகவல் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


கடந்த இரண்டு நாட்களாகவே வாட்ஸ்அப் மூலம் ஒரு செய்தி மிக வேகமாக பரப்பப்பட்டு வருகிறது. அது என்ன என்றால் வரும் 19ஆம் தேதி முதல் வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் எந்த பெட்ரோல் நிலையம் செயல்படாது என்பதுதான். அனைத்து நிறுவனங்களையும் போல பெட்ரோல் நிலையம் வாரம் ஒரு நாள் விடுமுறை அறிவிக்க உள்ளதாகவும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் வாட்ஸ் அப்பில் வந்தவுடன் அதனை உடனடியாக வெவ்வேறு குழுக்களுக்கும் பயனாளர்கள் அனுப்பி வருகின்றனர். இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் நிலையம் விடுமுறை என்கிற தகவல் மின்னல் வேகத்தில் பரவிவருகிறது. இதுகுறித்து விசாரித்தபோது தான் உண்மை தெரியவந்துள்ளது.

வழக்கம்போல் வாட்ஸ்அப் வதந்தி வாயன்ஙள் யாரோ ஒருவன் தான் இந்த வதந்தியை தீவிரமாக பரப்பி வருகிறார். வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் பெட்ரோல் நிலையங்கள் செயல்படும் என்றும் சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் மட்டுமே இரவில் பெட்ரோல் நிலையங்கள் மூடப்படும் என்றும் பெட்ரோல் டீசல் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க் மூடப்படும் என்கிற அறிவிப்பு வதந்தி தான் என்றும் அந்த சங்கம் விளக்கம் அளித்துள்ளது.