சன் டிவி நியுஸ் ஆன்கர் போட்டோ! பட்டி தொட்டி எங்கும் வைரல்! காரணம் என்ன தெரியுமா?

சன் டிவியில் கடந்த ஒரு வருடமாக செய்தி வாசித்து வரும் இவரின் புகைப்படம் திடீரென கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.


இந்த புகைப்படத்தில் இருப்பவர் அனிதா சம்பத். பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். பி.இ முடித்துவிட்டு ஊடகத்தின் மீதான காதலால் தொலைக்காட்சி செய்தி வாசிப்பளராக அறிமுகம் ஆனார். கடந்த 2014ம் ஆண்டு இவர் முதன் முதலில் பாலிமர் டி.வியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆனார். அப்போது அவருக்கு வயது 22 மட்டுமே. மிக சிறிய வயதாக இருந்தாலும் தெளிவான உச்சரிப்பு மற்றும் ஹோம்லியான லுக்கால் பலரையும் அனிதா கவர்ந்து இழுத்தார்.

   இதன் பின்னர் 2015ம் ஆண்டு அனிதா நியுஸ் 7 தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளராக பணியிர் சேர்ந்தார். அங்கும் ஒரு ஸ்டார் ஆங்கராகவே அனிதா திகழ்ந்தார். இந்த நிலையில் தான் சன் டிவியில் செய்தி வாசிக்கும் வாய்ப்பு அனிதாவுக்கு தேடி வந்தது. வழக்கமாக செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆகும் ஒவ்வொருவருக்கும் சன்டிவியில் செய்தி வாசிக்க வேண்டும் என்பது கனவாக இருக்கும்.

   ஆனால் சன் டிவியை பொறுத்தவரை சீனியர்களுக்கு மட்டுமே செய்தி வாசிக்க அனுமதி கொடுக்கும் வழக்கம் கொண்டது. இதனால் சன் நியுஸ் தொலைக்காட்சியில் முதலில் அனிதா செய்தி வாசிக்க தொடங்கினார். இதன் பிறகு சன் டிவியில் மாலை ஆறு மணிக்கு செய்தி வாசிக்கும் வாய்ப்பு அனிதாவுக்கு கிடைத்தது.


   இந்த நிலையில் தான் தீபாவளியை முன்னிட்டு பட்டுப் புடவையுடன் பாரம்பரிய அலங்காரத்தில் மாலை ஆறு மணி செய்தியை அனிதா வாசித்துள்ளார். அப்போது செய்தி அரங்கில் இருந்த அனிதாவின் தோழி எடுத்தது தான் இந்த புகைப்படம். இந்த ஒரே புகைப்படத்தின் மூலம் சன் டிவியின் ஆன்கர் என்பதையும் கடந்து பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் ஆகியுள்ளார் அனிதா.

   சன் டிவியில் செய்தி வாசிப்பாளர் என்று தெரியாத பலரும் அனிதா யார்? என்று விசாரிக்க ஆரம்பித்துள்ளனர். மேலும் அனிதாவின் இந்த புகைப்படத்தை வைத்து மீம்ஸ்களும் தூள் பறக்கின்றன. எதேச்சையாக தனது தோழி எடுத்த புகைப்படத்தை வழக்கம் போல் பேஸ்புக்கில் பதிவிட்டதாகவும் அது இந்த அளவிற்கு வைரல் ஆகும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் அனிதா கூறுகிறார்.


For More NEWS


TIMES TAMIL

TIMES TAMIL TWITTER PAGE

TIMES TAMIL FACEBOOK PAGE