அந்த நடிகருடன் நான் இருந்த நிமிடங்கள்! உருகும் சன் டிவி அனிதா!

பிரபல நடிகர் சூர்யாவுடன் தான் இருந்த நிமிடங்கள் குறித்து சன் டிவி அனிதா உருகிய நிலையில் வெளியிட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.


சன் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர்கள் இளம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் அனிதா. செய்தி வாசிப்பதுடன் சன் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கி வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் அவ்வப்போது அனிதா தலைகாட்டி வருகிறார்.

சமூகவலைதளங்களில் அனிதா பிரபலமாக இருப்பதால் முக்கிய நடிகர்கள் மற்றும் பிரபல இயக்குனர்கள் தங்கள் படங்களில் அவருக்கு வாய்ப்பு வழங்கி வருகின்றனர். அந்த வகையில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தில் அனிதா ஒரு வேடத்தில் நடித்துள்ளார். இதைப்போல் கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள காப்பான் படத்திலும் அனிதாவிற்கு ஒரு கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு முடிந்த நிலையில் அனிதா சூர்யாவுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் சூர்யாவுடன் சில நிமிடங்கள் மட்டுமே இருக்கும் வாய்ப்பு படப்பிடிப்பில் தனக்கு கிடைத்ததாக அவர் கூறியுள்ளார். ஆனால் அந்த நிமிடங்களை தன் வாழ்நாளில் ஒருபோதும் மறக்க முடியாது என்று கூறி கூறியுள்ளார் அளித்தார்.

சூர்யாவுடன் நடிப்பது குறித்து அனிதா கூறியுள்ள இந்த தகவலை சூர்யாவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றனர். அடுத்ததாக விஜய் உடனான தனது நடிப்பு அனுபவத்தை அறிக்கை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கலாம் .https://twitter.com/anithasampath_/status/1130329082342723584