மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய் வெடித்தது! ஹாஸ்பிடலில் காலமான சன் டிவி கேமரா மேன்! அதிர்ச்சி சம்பவம்!

உயர் ரத்த அழுத்தத்தால் குருதிக் குழாய்கள் வெடித்து, உயிருக்கு போராடி வந்த சன் தொலைக்காட்சியின் மூத்த ஒளிப்பதிவாளர் பி.செந்தில்குமார், இன்று 9/11/2019, காலை 10 மணியளவில் இயற்கையை அடைந்து விட்டார் என்பதை அடக்க முடியாத வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்.


சென்னை ராஜுவ்காந்தி மருத்துவமனையில் தீவிரமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டும், அவரை காப்பாற்ற முடியாமல், உற்றாற், உறவினர்கள், நண்பர்கள், சுற்றத்தார் என பலரையும் கவலையில் ஆழ்த்தி, காற்றோடு கலந்து விட்டார் செந்தில். 

அன்பும், அமைதியும் நிறைந்த கடின உழைப்பாளியான தன்னலமற்ற செந்தில், தனது உடல் நலத்தில் உரிய அக்கறையை செலுத்தாததால், மனைவி மற்றும் இரண்டு சிறு பிள்ளைகளை கண்ணீர் கடலில் கவிழ்த்து விட்டார். 

எண் 58, மூன்றாவது பிரதான சாலை, ஜெயராம் நகர், டான் பாஸ்கோ பள்ளி அருகில், கொளத்தூர், சென்னை-99, என்ற முகவரியில் வசித்த அவரது இல்லத்தில் பெ.செந்தில்குமாரின் உடல், நாளை (10/11/19) ஞாயிறு காலை 9 மணி வரை வைக்கப்பட்டு, இறுதி மரியாதைகள் செய்யப்படும்.

குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தி, அன்பு செலுத்திய உறவுகளுக்கு ஆறாத் துயரத்தை அளித்த செந்திலின் கனவுகள் நிறைவேற, தூய உள்ளங்கள் துணை நிற்கட்டும்...