மாஸ் வெற்றியுடன் IPL தொடருக்கு குட்பை சொன்ன டேவிட் வார்னர்!

கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு எதிரான ipl போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.


டாஸ் வென்ற கிங்ஸ் XI பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்து சன் ரைசர்ஸ் அணியை பேட்டிங் செய்ய பணித்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சன் ரைசர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்களை குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சாகா மற்றும் வார்னர் தொடக்கம் முதலே கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கினர். சாஹா 28 ரன்களுக்கு அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய மனிஷ் பாண்டே , டேவிட் வார்னர் வுடன் இனைந்து அணியின் ஸ்கோரை அதிரடியாக உயர்த்தினர்.

சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் 81 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். மனிஷ் பாண்டே 36 ரன்களை எடுத்தார். இதனால் சன் ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சன் ரைசர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்களை குவித்தது.

பின்னர் களமிறங்கிய கிங்ஸ் XI பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் சன்  ரைசேர்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.கிங்ஸ் XI பஞ்சாப் அணியில் லோகேஷ் ராகுல் மட்டும் சிறப்பாக விளையாடி 79 ரன்களை எடுத்தார். சன் ரைசர்ஸ் அணியின் கலீல் அஹ்மத் 3 விக்கெட்களை வீழ்த்தினார். 

இந்த போட்டியுடன் டேவிட் வார்னர் தனது சொந்த மண்ணான ஆஸ்திரேலியாவிற்கு உலகக்கோப்பை போட்டி பயிற்சிக்காக களம்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.