திருமண நிகழ்ச்சியிலுமா இப்படி கவர்ச்சி உடை! பிரபல நடிகரின் மகள் புகைப்படம் வைரல்!

பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரமாக திகழும் ஷாருக்கானின் மகள் தான் சுகானா கான். இவர் லண்டனில் தனது பட்டப் படிப்பை மேற்கொண்டு வருகிறார். விரைவில் சினிமாவில் நுழைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இவர் தற்போது தன்னுடைய உறவினரின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ளார்.  சுகானா கானின் கசின் ஆலியாவின்  திருமணம் கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பங்கேற்ற சுகானா ஆலிவ் க்ரீன் புடவையில் மிகவும் அழாகாக தோற்றம் அளித்தார்.  

இந்த புகைப்படத்தை அவரது இன்ஸ்டாங்க்ராம் பக்கத்தில் வெயிட்டார் மணப்பெண் ஆலியா.  இந்த புகைப்படம் பதிவு செய்த சில மணி நேரத்திலேயே  சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.  இதனை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் பலவிதமாக கமெண்ட் செய்த வண்ணம் உள்ளனர். 

திருமனதிற்கு முன்பு நடைபெற்ற மெஹந்தி விழாவின் புகைப்படங்களையும் மணப்பெண் ஆலியா அவரது இன்ஸ்டாங்க்ராம் பக்கத்தில் வெயிட்டார்.  இந்த புகைப்படத்தில் சுகானா கான், பிஸ்தா க்ரீன் சுடிதார் அணிந்து கொண்டும், கைகளில் மெஹந்தி வைத்து கொண்டு மகிழ்ச்சியாக தன் உறவுவினர்களுடன் போஸ் கொடுத்திருந்தார்.

தனது மகள் சினிமாவுக்கு வர வேண்டும் என திரையுலக பிரபலங்கள் பலரும் எதிர்பார்ப்பதாக  ஷாருக்கான்  சமீபத்தில் நடைபெற்ற நேர்காணலில் கூறினார். இருப்பினும் தனது மகள் இன்னும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு நடிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஷாருக்கான் அறிவுரை கூறியுள்ளார். மேலும் படிப்பை முடித்த பின்னர்தான் நடிப்பைப் பற்றி யோசிக்க வேண்டும் எனவும் அன்பு கட்டளை இட்டுள்ளார்.

கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரோமியோ ஜூலியட் நாடகத்தில் சுகானா கான் ஜூலியட் வேடத்தில் நடித்திருந்திருந்தார். தனது மகள் நடிப்பதை பார்ப்பதற்காக ஷாருக்கான் தனது குடும்பத்தினருடன் லண்டன் சென்றார். நாடகத்தைப் பார்த்த ஷாருக்கான் மிகவும் அற்புதமாக தனது மகள் நடித்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.