2 ஆண் போலீசுடன் சேர்ந்து கணவனுக்கு ஒரு பெண் போலீஸ் செய்த விபரீதம்! அதிர வைக்கும் காரணம்!

மனைவி மீது புகார் அளித்து, சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.


விருத்தாச்சலம் பெரியார் நகரில் வசிக்கும் சற்குணம் என்பவர் அப்பகுதியில் கரும்பு ஜூஸ் கடை நடத்தி வருகிறார்.  இவரது மனைவி தமிழ் சுதா, நெய்வேலியில் உள்ள டவுன்ஷிப் பகுதி போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிகிறார். இந்நிலையில், இருவருக்கும் இடையே கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக, கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.   

இதன்பேரில், திடீரென செவ்வாய்க்கிழமை சற்குணம் நடத்தும் ஜூஸ் கடைக்கு அவரது மனைவி தமிழ் சுதா வந்துள்ளார். அவருடன் பணிபுரியும் 2 ஆண் காவலர்களும் அங்கே வந்துள்ளனர். அவர்கள் ஒன்று சேர்ந்து, கரும்பு ஜூஸ் இயந்திரத்தை  எடுத்துச் சென்றுவிட்டனர். இதில், சற்குணம் கடும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.  ஜூஸ் இயந்திரம் தான்  வாங்கிக் கொடுத்தது என்றும் தமிழ் சுதா கூறியிருக்கிறார்.  

 இதனால் செய்வதறியாது திகைத்த சற்குணம், விருத்தாச்சலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் உடலில் ஊற்றி, தீக்குளிக்க முயன்றார்.  இதனை பார்த்ததும் அங்கிருந்த பொதுமக்கள் அரசு தலையில் தண்ணீர் ஊற்றி, அவரை காப்பாற்றினர். இச்சம்பவம் அங்கு திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.