துரைமுருகனால் கிடைத்த அவமானத்துக்கு முழுக்க முழுக்க சுதீஷ் மட்டுமே காரணம் என்று பிரேமலதா கொந்தளித்த விவகாரத்திற்குப் பிறகு அவர்களுக்குள் சுமூக உறவு ஏற்படவே இல்லை.
பொம்மை விஜயகாந்த்! பிரேமலதா - விஜய பிரபாகரனுக்கு தடை போட்ட சுதீஷ்! வீதிக்கு வந்த குடும்ப பஞ்சாயத்து!
அதனால்தன் சுதீஷ் தேர்தலுக்கு மனு தாக்கல் செய்வதற்கு சென்றபோதும், பிரசாரம் தொடங்குவதற்காக தைலாபுரம் தோட்டத்திற்கு சென்றபோதும் பிரேமலதா வரவில்லை. இதனால் கடுப்பான சுதீஷ் தனியாகக் கிளம்பிப்போனார்.
எடப்பாடியின் நெருக்கடியால் பிரசாரத்துக்குக் கிளம்பிய பிரேமலதா, இதுவரை சுதீஷ் தேர்தலில் நிற்கும் கள்ளக்குறிச்சி தொகுதிப் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. அவர் மட்டுமின்றி, விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரனும் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்து வருகிறார். அவரும் கள்ளக்குறிச்சி வரவில்லை.
இவை அனைத்தையும்விட, சுதீஷ் தேர்தல் செலவுக்கு இதுவரை கட்சியில் இருந்து எந்தத் தொகையும் கொடுக்கப்படவில்லையாம். கேட்டுக் கேட்டு அலுத்துப்போன சுதீஷ் ஒரு கட்டத்தில் டென்ஷாகிவிட்டாராம். ‘’நான் என் சொந்தப் பணத்தை செலவழிச்சுத்தான் ஜெயிக்கணும்னா, நீங்க யாரும் எனக்கு பிரசாரம் செய்ய வரவே வேண்டாம் என்று பிரேமலதாவுக்கும் விஜயபிரபாகரனுக்கும் தடா போட்டுவிட்டாராம்.
விஜயகாந்தை பொம்மை மாதிரி உட்கார வைச்சிட்டு பிரேமலதா நாடகம் நடத்துவதாக கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பாலகிருஷ்ணா குற்றம் சாட்டுவது போன்று, சுதீஷ் தேர்தலுக்கு முன்பே பேசுவதற்கு வாய்ப்பு உண்டு என்கிறார்கள். சீக்கிரமா வாயைத் திறங்க பாஸ்.