இயற்கை உபாதை! திடீர் முதுகுவலி! அடுத்த நொடி வெளியே வந்த குழந்தை! டாய்லெட்டில் 37 வயது பெண்ணுக்கு நேர்ந்த அதிசயம்!

டெலவேரை சேர்ந்த பெண் ஒருவருக்கு குளியலறையில் பெண் குழந்தை பெற்றடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.


டெலவேர் பகுதியில் கார்லா கொலாசோ கருத்தரிப்பதற்காக பல ஆண்டுகள் முயற்சி செய்து வந்தார். ஆனால், அவருக்கு அந்த பாக்கியத்தை கடவுள் கொடுக்கவில்லை. ஆனால் கடந்த 10 மாதங்களாக அவர் கர்ப்பம் தரித்துள்ளார். ஆனால் அதை அவர் உணரவில்லை. வழக்கம்போல் வயிறு உப்பசமாக இருப்பதா நினைத்து வந்தார்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் குளித்துக் கொண்டிருக்கும்போது கார்லா திடீரென முதுகுவலி என கத்தத் தொடங்கினார். உடனடியாக அவரது மைத்துனர் என்னவென்று தெரியாமல் அவர் குளியலறை சென்று பார்த்தார். தனக்கு உதவுமாறு மைத்துனர் சாண்டோசை கேட்டுக் கொண்டதால் கார்லாவுக்கு உதவ அவர் முன்வந்தார். என்ன நடக்கிறது என்று பார்க்க சாண்டோஸ் கொலாசோவின் கால்களைத் திறந்தபோது, ​​

அவர் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுக்கும் நிலையில் இருப்பதைக் பார்த்து அதிர்ச்சியடைந்தார். "என் வாழ்க்கையில் நான் அனுபவித்த மிக அருமையான தருணம் இதுதான் என்று நான் நேர்மையாக சொல்ல முடியும்" என்று சாண்டோஸ் பேஸ்புக்கில் இந்த சம்பவத்தை விவரித்தார். 

அமுரா ரோஸ் என பெயரிடப்பட்ட அந்த பெண் குழந்தை ஆகஸ்ட் 25 ஆம் தேதி பிறந்தபோது வெறும் 2 பவுண்டுகளுக்கு மேல் இருந்தது. அவர் ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் உடல் எடையை அதிகரித்து வருவதாகவும், செழித்து வருவதாகவும் கூறப்படுகிறது.