திடீர் இந்தி எதிர்ப்பு போராளியான சுப்பிரமணிய சுவாமி!

நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை தொடர்பான வழக்கின் விசாரணை நேற்று டெல்லி,அடிஷனல் சீஃப் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.


சோனியா காந்தி,ராகுல்,மோதிலால் வோரா,ஆஸ்கர் பெர்னாண்டஸ், சுமன் துபே,சாம் பிட்ரோடா ஆகியோர் மீது சு.சாமி தொடர்ந்திருக்கும் வழக்கில் நேற்று அவரை சோனியாவின் வழக்குரைஞர் ஆர்.எஸ் சீமா குறுக்கு விசாரணை செய்தார்.

காங்கிரஸ் தலைவர்கள் ஏமாற்றுப் பேர்வழிகள் என்றும் காங்கிரஸ் தொண்டர்கள் பாதிக்கப் படுகிறார்கள் என்று சு.சாமி தெரிவித்தபோது, வழக்குரைஞர் ஆர்.எஸ் சீமா, நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை கட்டிடம் அமைந்திருக்கும் இடம் குறித்த ஒரு கேள்வியை இந்தியில் கேட்டார்.

அதை எதிர்த்த சுப்பிரமணியன் சாமி,கேள்விகளை ஆங்கிலத்தில் கேளுங்கள்.அதுதான் நீதிமன்றத்தின் மொழி என்று சொன்னதோடு,தாம் ஒரு தமிழர் என்பதையும் நீதிமன்றத்துக்கு நினைவூட்டினார்.அப்போது குறுக்கிட்ட நீதிபதி சாமர் விஷால் ,ஆங்கிலம்,தமிழ் இரண்டுமே நீதிமன்றத்தின் மொழிதான் என்றார்.

அதற்கு தனக்கு சமஸ்கிருதம் சேர்ந்த இந்திதான் புரியும்,உருது கலந்த இந்தி புரியாது என்று பதில் அளித்தார்.அதற்குப் பிறகு சோனியா காந்தியின் வழக்கறிஞர் குறுக்கு விசாரணையைத் தொடர்ந்தார்.சுவாமியின் இந்தி எதிர்ப்பு பிரகடனத்துக்குப் பிறகு வழக்குரைஞர் அவரை ஆங்கிலத்தில் மட்டுமே கேள்வி கேட்டார்.