திடீரென தோன்றிய ஜோதி! பரவசத்தில் ஆழ்ந்த பக்தர்கள்! எங்கு தெரியுமா?

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அருட்பிரகாச வள்ளலார் திருச்சபையில் தோன்றிய ஜோதியால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியுள்ளது.


திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அருகே உள்ள அருட்பிரகாச வள்ளலார் திருச்சபையில் திடீரென ஏற்பட்ட ஜோதியால் அதைப்பார்த்த மக்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

மிகவும் புகழ்பெற்ற திருச்சபையாக விளங்குவது அருட்பிரகாச வள்ளலார் திருச்சபை. வள்ளலார் என்றாலே ஒளி மயமானவர் என்பது அதன் பொருள். மற்றும் ஜோதி மயமானவர் என மக்கள் நம்பி வருகின்றனர். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட ஜோதி சுமார் 45 நிமிடங்கள் ஒளிர்விட்டு எரிந்தது இந்நிலையில் இந்த காட்சியானது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

இதையடுத்து இதைப்பார்த்த திருச்சபையில் இருந்தவர்கள் இந்த வீடியோ காட்சியை சமூகவலைதளத்தில் பதிவேற்றியுள்ளனர். இதை சமூக வலைதளங்களில் பார்த்த பக்தர்கள் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளதாக தங்களது பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.