பிக்பாஸ் வீட்டில் கவின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை! யார் தெரியுமா? அதிர்ந்த போட்டியாளர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் கன்னத்தில் திடீரென பிரதீப் அறைந்ததால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.


பிக் பாஸ் விளையாட்டு நிகழ்ச்சியின் 3வது சீசனில் போட்டியாளர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கடந்த 3 நாட்களாக வந்து செல்கின்றனர். முகனின் குடும்பத்தார் வருகையை தொடர்ந்து லோஸ்லியா, தர்ஷன், வனிதா மற்றும் சேரனின் குடும்பத்தினர் வீட்டிற்கு வருகை தந்துள்ளன்ர. இன்னும் கவின், ஷெரின் குடும்பத்தினர் மட்டுமே வருகை தரவேண்டியுள்ளது.

இந் நிலையில் கவினின் நண்பரும் நடிகருமான பிரதீப் பிக்பாஸ் வீட்டிற்கு உள்ளே வந்தார். அப்போது கவினை பார்த்து பிரதீப் நீண்ட வசனம் ஒன்று பேசுகிறார். ‘எனக்கு ஒரு கடமை பாக்கி உள்ளது. இவ்வளவு கேவலமா நீ ஆடின ஆட்டத்துக்கு, மட்டமான விஷயங்கள் செய்ததற்கு, உன்னை நம்புனவங்கள கைவிட்டதுக்கு, பிக்பாஸ் விளையாட்டுல இருக்கறவங்க மனச புண்படுத்துனதுக்கு, நான் இப்ப ஒரு விஷயம் செய்யப் போறேன்.

பிக்பாஸ் டைட்டில் ஜெயிச்சுட்டு பெரிய ஆளா ஆயிட்டின்னா, என்னை மேடையில கூப்பிட்டு திருப்பி அடிச்சிக்கோ’என்று சொல்லிவிட்டு சற்றும் எதிர்பாராத வகையில் கவின் கன்னத்தில் பளார் என அறைந்தார் பிரதீப். 

பிரதீப் அறைந்ததை பார்த்து வனிதா, சேரன், லாஸ்லியா கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஷெரின் ஓ காட் என ஷெரின் பதறுகிறார். இதைத் தொடர்ந்து பிரதீப் தனது வேலை முடிந்துவிட்டதாகக் கூறி கவினைக் கட்டிப்பிடிக்கிறார்

ஏற்கனவே லாஸ்லியாவின் தந்தையின் வருகைக்கு பின் கவின் தனது தவறை உணர்ந்து, இனிமேல் நம்மால் யாரும் மனம் வருந்தக்கூடாது என்று முடிவெடுத்துள்ள நிலையில் நண்பரின் இந்த அறை விழுந்துள்ளது.