ஐசியுவில் திடீர் பவர் கட்! துடிதுடித்து இறந்த நோயாளிகள்! மதுரை அரசு மருத்துவமனையில் விபரீதம்!

மதுரையில் ஏற்பட்ட திடீர் பவர் கட்டால் அரசு மருத்துவமனை ஐசியுவில் அனுமதிக்கப்பட்டிருந்த 5 பேர் அடுத்தடுத்து துடிதுடித்து உயிரிழந்தனர்.


மதுரை மற்றும் சுற்றுவட்டாரங்களில் நேற்று மாலை திடீரென மழை பெய்தது. அப்போது பலத்த சூறை காற்றும் வீசியது. இதனால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை முழுவதும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.

அந்த வகையில் சுமார் 2 மணி நேரம் மதுரை மாநகரில் மின்சாரம் இல்லாமல் இருந்தது. இதனால் மதுரை அரசு  மருத்துவமனையிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் ஐசியுவிலும் மின்சாரம் இல்லாததால் வென்டிலேட்டர் இயங்கவில்லை எனக் கூறப்படுகிறது. 

வெண்டிலேட்டர் இயங்காத காரணத்தினால் செயற்கை சுவாசம் பெற்று வந்த நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. பிறகு ஒருவர் பின் ஒருவராக 5 பேர் அடுத்தடுத்து துடிதுடித்து உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது- 

வென்டிலேட்டர் இயங்காத காரணத்தினால் 5 பேரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக உறவினர்கள் கூறியுள்ளனர். ஆனால் தாங்கள் ஜெனரேட்டர் மூலமாக வென்டிலேட்டர் இயக்கத்தை சீரமைத்ததாகத் டீன் வனிதா கூறியுள்ளார். வேறு மருத்துவமனைகளில் இருந்து ஆபத்தான நிலையில் கொண்டுவரப்பட்டவர்கள் தங்கள் நோயின் தன்மையால் உயிரிழந்ததாகவும் விளக்கம் அறிவித்தார்.