பினராயி விஜயனின் சென்னைப் பயணத்தில் திடீர் மாற்றம்!

கேரள முதலமைச்சரும் சிபிஎம் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான பினராயி விஜயன், சென்னையில் நடக்கும் நிகழ்வுக்காக இன்று இரவு சென்னைக்கு வருவதாக இருந்தது.


திடீரென அது ரத்துசெய்யப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பு அமைப்பான தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் நாளை பிப்.26ஆம் தேதி ’குடியுரிமை பாதுகாப்பு மாநாடு’ நடத்தப்படுகிறது. அதில் பங்கேற்பதற்காக அவர் திருவனந்தபுரத்திலிருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார். அவரை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இது குறித்து அக்கட்சியின் சார்பில் தயாராக இருந்தநிலையில், பினராயி விஜயனின் பயணத் திட்டம் மாற்றப்பட்டு நாளை சென்னை வருகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்று இரவு சென்னை விமானநிலையத்தில் நடக்கவிருந்த வரவேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது; சிரமத்திற்கு வருந்துகிறோம் என்று அக்கட்சியின் மாநில அலுவலகச் செயலாளர் வெ. ராஜசேகரன் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.