ம.தி.மு.க.வில் நெல்லை வட்டாரத்தில் அதிரடி மாற்றம்! தென்காசிக்கு புது மா.செ.!

மதிமுகவில் திருநெல்வேலி புறநகர் மற்றும் திருநெல்வேலி மாநகர் மாவட்ட அமைப்புகளில் மாற்றம்செய்யப்பட்டு, திருநெல்வேலி புறநகர் மாவட்டம், திருநெல்வேலி மத்திய மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டம் என மூன்று மாவட்ட அமைப்புகளாக உருவாக்கப்படுகிறது.


இதன்படி,  திருநெல்வேலி புறநகர் மாவட்டம் :திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழகத்தில் அம்பாசமுத்திரம், நாங்குநேரி மற்றும் இராதாபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட நகர, ஒன்றியக் கழகங்கள் அடங்கும்.

உவரி எம்.ரைமண்ட் புறநகர் மாவட்டப் பொறுப்புக்குழுத் தலைவராகவும், விஜய அச்சம்பாடு வி.சஞ்சீவிகுமார், மறுகால்குறிச்சி செ.துரைசாமி, அம்பாசமுத்திரம் சு.முத்துசுவாமி, திருக்குறுங்குடி மு.மணிகண்டன், வீரவநல்லூர் திருமதி சு.வேலம்மாள், களக்காடு வா.வேலுமயில், திருவம்பலபுரம் டி.நாகூர் மீரான், பணகுடி மு.சங்கரகுமார் ஆகியோர் மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினர்களாகவும் நியமிக்கப்படுகிறார்கள்.

திருநெல்வேலி மத்திய மாவட்டம் : இதில், திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதிகளுக்கு உள்பட்ட மாநகராட்சி மற்றும் ஒன்றியக் கழகங்கள் அடங்கும். திருநெல்வேலி மாநகர் மாவட்டக் கழகப் பொறுப்பாளராக இயங்கி வந்த கே.எம்.ஏ. நிஜாம் (முகவரி: 66-ஏ, தெற்கு பைபாஸ் ரோடு, சேவியர் காலனி, திருநெல்வேலி - 627 005; கைப்பேசி எண். 94420 - 18099) திருநெல்வேலி மத்திய மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

தென்காசி மாவட்டம் : புதிய தென்காசி மாவட்ட அமைப்பில் சங்கரன்கோவில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி), கடையநல்லூர், தென்காசி மற்றும் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட ஒன்றிய, நகரக் கழகங்கள் அடங்கும்.

திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழகப் பொறுப்பாளராக இயங்கி வந்த வழக்கறிஞர் தி.மு. இராசேந்திரன் (முகவரி: வைகோ இல்லம், எண். 6/130-ஏ, பிரதான சாலை, திருமலாபுரம் கிராமம், பனவடலிசத்திரம் (அஞ்சல்), சங்கரன் கோவில் (வட்டம்), தென்காசி மாவட்டம் - 627 953 ; கைப்பேசி எண். 94433 - 70232) மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

ம.தி.மு.க. தலைமைக்கழகமான தாயகத்திலிருந்து இன்று வெளியிடப்பட்ட வைகோவின் அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.