சடன் பிரேக் போட்ட பஸ்..! பின்னால் வந்த காருக்கு ஏற்பட்ட விபரீதம்! சென்னை பரபரப்பு!

சென்னையில் கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகை அருகே 4 வாகனங்கள் தொடர்ந்து மோதி கொண்ட சம்பவம் மிகவும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விபத்தில் 2 பேர் காயமடைந்துள்ளனர்.


கிண்டி ஆளுநர் மாளிகை சாலையில், மிகவும் பரப்பரப்புடன் இயங்கும் சாலை, இதில் தீடீரென்று, ஒரு வாகனத்தின் மீது பின்னால் வந்த கார் ஒன்று மோதியுள்ளது. இதற்கிடையே, ஓட்டுநர் காரை திடீரென நிறுத்த, அதன் பின்னால் வந்துகொண்டிருந்த மாநகரப் பேருந்து அந்தக் கார் மீது மோதி நின்றுள்ளது. 

நொடிப்பொழுதில் பேருந்தின் பின்னால் வந்த கார் ஒன்று அதன் பின் பக்கத்தில் வேகமாக சொருகிக் கொண்டுள்ளது. 4 வாகனங்கள் தொடர்ந்து அடுத்தடுத்து மோதிக்கொண்ட இந்த பயங்கர விபத்தில் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும், யாருக்கும் உயிருக்கு ஆபத்துல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.