திப்பு ஜெயந்தி விழாவுக்கு திடீர் தடை! உண்மையான வில்லன் திப்புவா அல்லது எடியூரப்பாவா?

திப்பு சுல்த்தான் இறந்து 220 வருடம் ஆகிறது.மைசூர் புலி என்று அழைக்கப்பட்ட திப்புவின் வீழ்ச்சிக்கு பிறகுதான் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இந்தியாவில் நிலை கொண்டது.


திப்புவின் பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை இருந்த நிலைதில் கடந்த 2015 ம் ஆண்டு , நவம்பர் 10 தேதி திப்பு ஜெயந்தன் கொண்டாடப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்தார்.திப்பு நூற்றுக்கணக்கான கோவில்களை இடித்தவர்.பல்லாயிரம் இந்துக்களை கட்டாயமாக மதம் மாற்றியவர்,அவர் பிறந்தநாளை கொண்டாடடக் கூடாது என்று பஜ்ரங்தள்,வி.ஹெச்.பி போன்ற அமைப்புகள் போராட்டம் நடத்தின.குடகில் நடந்த கலவரத்தில் இருவர் கொல்லப்பட்டனர்.

ஆனாலும்,கடந்த மூன்றாண்டுகளாக திப்பு ஜெயந்தி கொண்டாடப்பட்டுத்தான் வந்தது.இப்போது,பதவியேற்ற மூன்றாவது நாளே திப்பு ஜெயந்திக்கு தடை விதித்தி எடியூரப்பா உத்தரவிட்டிருப்பது நடுநிலையாளர்களிடம் எரிச்சலை கிளப்பி இருக்கிறது.அவர்கள் சொல்கிற குற்றச்சாட்டுகளில் உண்மை இருந்தாலும் 1791ல் மராட்டிய இந்துக்களால் கொள்ளையடிக்கப்பட்ட சிருங்கேரி மடத்தை மீண்டும் சீரமைக்க நிதிகொடுத்ததும் திப்புதான்.

ஒரு யானை,பல்லக்கு,ஐந்து குதிரைகளுடன் அவரது தந்தை ஹைதர் அளித்த நிதிபற்றியும் சிருங்கேரி மட ஆவணங்கள் சொல்கின்றன. திப்பு பூர்ணையா என்கிற இந்து உயர்ஜாதி அமைச்சராலும்,மீர்சாதிக் என்கிற ஒரு தளபதி இருவராலும் காட்டிக்கொடுக்கப்பட்டு இறந்த ஸ்ரீரங்கப்பட்டணம் கோட்டைக்குள் இருக்கும் இரண்டு ஆலையங்களிலும் அவர் மரணம் வரை நாண்குகால பூஜை நடந்து கொண்டுதான் இருந்தது.ஆள்வோரில் அப்பழுக்கு இல்லாதோர் யார்.

எடியூரப்பாவே ஊழல் குற்றச்சாட்டால் பதவி இழந்தவர்தானே.இப்போது அவர் முதல்வராவது கர்நாடகாவுக்கு இழிவில்லையா என்று கேட்ட்கும் அவர்கள், ஆங்கிலேயரை இந்த மண்ணில் இருந்து அகற்ற போராடிய ஒரு வீரன் என்கிற முறையில் அவன் பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்கிறார்கள். ஒரு வேளை எடியூரப்பா திப்புவை வீழ்த்த சதிசெய்த பூர்ணையா,மீர்சாதிக் ஆகியோருக்கு விழா எடுப்பாரோ.