புதிய கல்விக் கொள்கையில் தமிழக அரசின் முடிவு என்னவாக இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்துவந்த நேரத்தில், இன்று தன்னுடைய நிலையை அதிரடியாக அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடி பழனிசாமியின் அதிரடி அறிவிப்பு… மெய் மறந்து பாராட்டிய ஸ்டாலின்.
பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் என்றென்றும் இருமொழிக் கொள்கைகளை மட்டுமே தன்னுடைய அரசு செயல்படுத்தும் என்று மத்திய அரசுக்கு தெரிவித்துவிட்டார். இந்த அறிவிப்புக்கு நாடுமுழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
அந்த வகையில், எதிர்க் கட்சி தலைவர் ஸ்டாலினும் பாராட்டவேண்டிய சூழலுக்கு ஆளாகியிருக்கிறார். இன்று அவர், ‘புதிய கல்விக் கொள்கை என்ற பெயரால் மும்மொழித்திட்டம் புகுத்தப்பட்டதை எதிர்த்துள்ள முதலமைச்சர். பழனிசாமிக்கு நன்றி!
மத்திய அரசின் 'மொழிக் கொள்கை' மட்டுமல்ல கல்விக் கொள்கையே பல்வேறு தவறுகளைக் கொண்டது; மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிப்பது என்ற அடிப்படையிலும் முதலமைச்சர் பழனிசாமி தனது எதிர்ப்பை பதிவு செய்திட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.