குருமூர்த்தி பேச்சைக் கேட்டால் குட்டிச்சுவர்தான்..! அடுத்த முதல்வரை கைகாட்டப் போவது சசிகலாதான். சுப்பிரமணியன் சுவாமியின் அருளுரைகள்

தன்னுடைய 80வது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக மதுரைக்கு வந்து சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி, பேசிய ஒவ்வொன்றும் வைரல்தான்.


மதுரை காமராசர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க கட்டிடத்தில் நடைபெறற்ற விழாவில் சுப்பிரமணியன் சுவாமி அருளுரைகளை அள்ளிவீசினார்.

எடுத்தவுடன் ரஜினிகாந்துக்கு எதிராகப் பேசினார். எந்த சினிமாகாரர்களையும் தமிழக மக்கள் நம்ப க்கூடாது என்றவர், அடுத்த அதிரடியாக பிரதமரையும் நிதியமைச்சரையும் வறுத்தெடுத்தார். 

தவறான கொள்கையால்தான். பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துவிட்டது. மோடிக்கும் , நிர்மலா சீதாராமனுக்கும் பொருளாதாரம் குறித்த அறிவு கிடையாது. வெங்காய விலை ஏற்றம் அடையும் என ஏற்கனவே கூறியிருந்தேன், ஏனென்றால் அதிக அளவில் ஏற்றுமதி நடைபெறுகிறது. 

வெங்காய விலை தொடர்பாகவும், பொருளாதார மேம்பாடு குறித்தும் மோடிக்கு ஏழு முறை கடிதம் அனுப்பியுள்ளேன் ஆனால் அதனை அவர் பொருட்படுத்தவில்லை என்றவர் அடுத்தபடியாக சசிகலாவுக்கு வந்தார்

தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்க இருப்பவர் சசிகலாதான். அவர் சொல்பவர்தான் முதல்வராக வர முடியும். குருமூர்த்தி பேச்சை கேட்பவர்கள் குட்டிசுவர் ஆவார்கள். அவர் பேச்சைக் கேட்ட ஓ.பி.எஸ் போலவே எடப்பாடி பழனிசாமியும் குட்டிச் சுவர் ஆகிவிடுவார். 

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களால். தமிழக உரிமையை மீட்க முடியவில்லை. தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இங்கே சிங்கம் போன்று சீன் போட்டுவிட்டு, அங்கே பூனைக்குட்டி போலவே திரிகிறார்கள். 100 நாட்கள் சிறையிலிருந்த ப.சிதம்பரம் இனிமேல் தான் அகம்பாவத்தை குறைக்க வேண்டும், இல்லையென்றால் ஆபத்துதான் என்று எச்சரிக்கை செய்துள்ளார்.