சுப்பிரமணிய சாமி - தினகரன் ரகசிய கூட்டணி! தமிழக அரசியலை தகிதகிக்க வைக்கும் பரபரப்பு பின்னணி!

ஜெயலலிதாவும் சசிகலாவும் சொத்துக் குவிப்பு வழக்கில் மாட்டுவதற்கு பிள்ளையார் சுழி போட்டதே சுப்பிரமணிய சாமிதான்.


இப்போது ஜெயலலிதா மேலே போய் சசிகலா , இளவரசி,சுதாகரன் உள்ளே போன பிறகு அதிமுக சின்னா பின்னமாகி,பிஜேப்பி அதை மிரட்டல் பசை வைத்து ஒட்டி,அப்படியும் தினகரன் தனிக்கட்சி துவங்கி பலகாட்சுகள் மாறிவிட்டன. இப்போது திடீரென சுப்பிரமணிய சுவாமி தினகரன் பக்கம் சாய்ந்து ட்விட்டரில் வரிசையாக ட்வீட் செய்து கொண்டு இருக்கும் ரகசியம் என்ன?

இதன் பின்னணியில் இருப்பவர் ஒரு மைலாப்பூர் ஆடிட்டர்.தமிழின் முதல் அரசியல் பத்திரிகையின் இன்றைய ஆசிரியர்.அதிமுக ஒரு ஆண்மை இல்லாத கட்சி என்று சொன்னவர்!. அவருக்கும் சு.சாமிக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்.அவர்தான் சசிகலாவை உள்ளே வைத்து விட்டு எடப்பாடி, ஓபிஎஸ் கூட்டணிiயை வைத்து தமிழகத்தை பிஜேபியின் கட்டுப்பாட்டிலl கொண்டு வரலாம் என்று ஐடியா கொடுத்தவர் என்று சு.சாமியும் தினகரனும் நம்புகிறார்கள்.அனுதாப மைலாப்பூர் ஆணழகன்  கட்டுப்பாட்டில் உள்ள அதிமுக சு.சாமியை மதிப்பதில்லை.

அதேசமயம் மைலாப்பூர் ஆடிட்டருக்கும் சுப்பிரமணிய சாமிக்கும் பலகாலமாக பகை இருந்தது.அதனால் தான்,அதிமுக,திமுகவை விட தேசிய அரசியலுக்கு தினகரந்தான் சரி என்று சு.சாமி கண்டுபிடிக்க காரணம்.அதாவது எதிரிக்கு எதிரி நண்பன்! என்கிற எளிய தத்துவம்.பிஜேபி ஆட்சியை பிடித்த உடன் தன்னை நிதி அமைச்சர் ஆக்குவார்கள் என்று சு.சாமி எதிர் பார்த்தார்,ஆனால் மோடியோ அருண் ஜெட்லியை நிதியமைச்சர் ஆக்கினார்.

அருண் ஜெட்லி ஸ்டார் ஹோட்டல் உணவக பரிசாரகர் போலிருப்பதாக சொல்லி மோடி ,ஜெட்லி இருவரின் வெறுப்பையும் சம்பாதித்தார் சு.சாமி.இரண்டாவது முறை பிஜேபி ஜெயித்த பிறகு சுவாமி மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தார்,ஆனால் இம்முறை நிர்மலா சீத்தாராமன் நிதி அமைச்சர் ஆனதை சு.சாமியால் தாங்கிக் கொள்ள முடியாததால் பிஜேபிக்கு எதிரான எல்லா ஆயுதங்களையும் தேடி எடுத்து ஏவுகிறார் சு.சாமி!

அதன் புதிய வடிவம்தான் சசிகலா விடுதலையும்,தினகரன் தேசிய அரசியலுக்கு சரியாக இருப்பார் என்கிற அவரது கணிப்பும்.ஆனால் மோடிக்கும் சுப்பிரமணிய சாமிக்கும் நல்லுறவு இல்லாததால் சசிகலா விடுதலை சாத்தியமா என்பது இன்னுன் சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. எப்படியோ , பிஜேபி உள்கட்சி குழப்பங்கள் அமமுகவுக்கு சாதகமாக அமைந்தால் தமிழக தொலைக்காட்சிகளில் பிரேக்கிங் நியூசுக்கு பஞ்சம் இருக்காது என்பது மட்டும் நிச்சயம்.