நவீன நாரதர் சுப்பிரமணியன் சுவாமி இப்போ எந்தக் கட்சி? சேம் சைடு கோல் போட்ட சுவாமியால் டென்ஷனில் பா.ஜ.க.!

நவீனகால நாரதர் என்று பெயர் வாங்கி இருக்கும் சுப்பிரமணியன் சுவாமி, அவ்வப்போது ஆளும் கட்சிக்கு எதிராக ட்வீட்களைப் போட்டு அலறவைப்பது சகஜம்.


இந்தியப் பொருளாதாரத்தை என்னால்தான் சரிசெய்ய முடியும் என்று அவர் சொன்னதை யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ளவே இல்லை. அதனால், அவராகவே பொருளாதாரத்தை சீர் செய்வதற்கு என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று ஐந்து ஆலோசனைகளை வழங்கவே, ஆடிப்போயிருக்கிறது பா.ஜக. ஏனென்றால் ஆலோசனை என்ற பெயரில் அவர் முன்னாள் அருண் ஜெட்லி தொடங்கி இன்றைய நிர்மலா சீதாராமன் வரை எல்லோரையும் கழுவி ஊற்றியிருக்கிறார்.

சுப்பிரமணியன் சுவாமி பார்வையில் அரவிந்த் சுப்ரமணியம், ரகுராம் ராஜன், அருண் ஜெட்லி என யாருக்குமே பொருளாதாரம் என்றால் எதுவுமே தெரியாது என்று திட்டித் தீர்த்திருக்கிறார். முக்கியமாக அருண் ஜெட்லி மீது என்ன கோபமோ, அத்தனை பிரச்னைகளுக்கும் அவர்தான் காரணம் என்று சொல்லியிருக்கிறார்.

நிர்மலா சீதாராமன் பற்றியும் சுவாமிக்கு நல்ல எண்ணம் இல்லை. யாருமே எதிர்பார்க்காத வகையில் திடீரென்று 1.4 லட்சம் கோடி ரூபாயை கார்ப்பரேட் வரிச் சலுகை வழியாக துடைத்து எறிந்து இருக்கிறார். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இப்படி ஒரு பெரிய வரிச் சலுகையைக் கொடுத்தால், கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை அதிகரித்து சப்ளையைத் தான் மேலும் அதிகப்படுத்துவார்கள். இது இன்னமும் பிரச்னையை அதிகரிக்கும்” என்று நிர்மலாவுக்கு சூடு போட்டுள்ளார்.

வருமான வரியை முழுமையாக ஒழித்துக் கட்டினால், மக்கள் அதிகமாக வாங்குவார்கள், பொருளாதாரம் மேம்படும் என்கிறார். இவர் சொல்வதையும் மோடி செய்து பார்க்கலாமே..!