சிவகங்கை யில் கோஷ்டி தகராறு காரணமாக தனது கணவரை கைது செய்ய வந்த போலிசாரை தடுத்த கர்பிணிப்பெண் காலால் எட்டி உதைக்கபட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
காலில் விழுந்து கதறிய நிறைமாத கர்ப்பிணி! வயிற்றிலேயே உதைத்த சப் இன்ஸ்பெக்டர்! அதிர வைக்கும் காரணம்!
சிவகங்கை, கொந்தகை கிராமத்தில் முனியாண்டிபுரத்தைச் சேர்ந்த காளீஸ்வரன். கடந்த 18-ம் தேதி நடைபெற்ற கோயில் திருவிழாவில் இருப் பிரிவிற்கு இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இது குறித்த விசாரணைக்காக காளீஸ்வரன் என்பவரை அழைத்து செல்ல போலீசார் முற்பட்டனர்.
ஆனால் தனது கணவர் எந்த பிரச்சனையிலும் ஈடுபடவில்லை என்று அவரது மனைவி சித்திரா போலீசாரிடம் கூறியுள்ளார். மேலும் தான் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளதாகவும் தனது கணவரை கைது செய்ய வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அதனை பொருட்படுத்தாமல் போலீசார் காளீஸ்வரனை இழுத்துள்ளனர்.
இதனால் வேதனை அடைந்த கர்ப்பிணி சித்ரா உடனடியாக காவல் உதவி ஆய்வாளர் காலில் விழுந்து தனது கணவரை விட்டுவிடும் படி கெஞ்சியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சப் இன்ஸ்பெக்டர் - ஜான்சன், கர்ப்பிணி பெண் என்றும் பார்க்காமல் அவரது வயிற்றில் எட்டி உதைத்துள்ளார்.
இதில் நிலைக்குலைந்த சித்திரா சரிந்து தரையில் விழுந்தார். கடும் வயிற்று வலியால் அலறித்துடித்த சித்திராவை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் வாந்தி எடுத்து மிகவும் சோர்வாக காணப்பட்டார். மேலும் சித்திரா தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் உதவி ஆய்வாளர் ஜான்சன் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே மதுரையில் வியாபாரி ஒருவர், போலீசார் லத்தி வீசியதில் பரிதாபமாக பலியானதை அடுத்து, கர்பிணிப்பெண் தாக்கபட்ட சம்பவம் காவல்த்துறையினர் மீது அதிருப்தியும், பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.