காதல்! உல்லாசம்! கர்ப்பம்! பிறகு கருக்கலைப்பு! போலீஸ் சப் இன்ஸ்பெக்டரால் இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

பேஸ்புக்கில் அறிமுகமான காதல் ஒன்று பாலியல் பலாத்காரம், கருக்கலைப்பு, கொலைமிரட்டல், மிரட்டல் ஆடியோ வைரல் என நாகை மாவட்டமே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது


நாகை மாவட்டம் மயிலாடுதுறையை சேர்ந்த பெண்ணும், திட்டச்சேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் விவேக் ரவிராஜூ என்பவரும் பேஸ்புக்கில் அறிமுகமானவர்கள். ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்த நிலையில் முகநூலில் முகம் பார்க்காமலே காதல் மலர்ந்துள்ளது. பின்னர் இருவரும் அடிக்கடி வெளியில் சென்று தனிமையில் இருந்துள்ளனர். இதை அடுத்து அந்த பெண் கர்ப்பம் தரித்துள்ளார். 

தான் கர்ப்பம் அடைந்துள்ளதாக உடனே திருமணம் செய்து கொள்ளுமாறு உதவி காவல் ஆய்வாளரின் சட்டையை பிடித்து அந்த பெண் கேட்க தற்போது திருமணம் செய்து கொள்ள முடியாது என்றும் ஒரு வருடம் கழித்து கண்டிப்பாக செய்து கொள்கிறேன் என்று சமாதானம் செய்துள்ளார் ரவிராஜூ. மேலும் தற்போது குழந்தை பிறந்தால் இருவருக்குமே அசிங்கம் எனக்கூறிய ரவிராஜூ சென்னைக்கு அழைத்து சென்று கருக்கலைப்பு செய்துள்ளார்.

பின்னர் ஒருவழியாக பிரச்சனை முடிந்தது என கருதிய ரவிராஜூ அந்த இளம்பெண்ணை கழட்டிவிட்டு தன்னுடைய காவல்துறை பணியை திறம்பட செய்துவந்தார். திடீரென ரவிராஜூ தொடர்பில் இருந்து துண்டித்து விட்டதை உணர்ந்த அந்த பெண் ரவிராஜூவுக்கு போன் செய்து நியாயம் கேட்டுள்ளார்.

ஆனால் ரவிராஜோ திருமணம் செய்து கொள்ளமுடியாது என்றும் இந்த விஷயத்தை கூறினால் குடும்பத்துடன் கொலை செய்து புதைத்துவிடுவேன் என கூறி அப்பெண்ணை மிரட்டியுள்ளார். காதலையும் தொலைத்து, கருவையும் இழந்து எங்கே உயிரையும், உறவினர்களையும் இழந்துவிடுவோமோ என்ற பயத்தில் அந்தப் பெண் தற்போது அவரிடம் பேசிய ஆடியோவை வைரலாக்கி விட்டுள்ளார்.

தற்போது இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது. காவல்துறையை நண்பனாக மட்டுமே பார்க்கவேண்டும். காதலனாக பார்க்கக்கூடாது என்கிறார்கள் சிலர்.