படிக்கும் வயதில் காதல்! காமம்! பிறகு கர்ப்பம்! கும்பகோணம் பிளஸ் 2 மாணவிக்கு நேர்ந்த விபரீதம்!

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த புகாரில் தேடப்பட்டு வந்த இளைஞர் ஒரு வருடத்திற்கு பின்னர் சிக்கினார்.


தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பந்தநல்லூர் காலனியில் +2 படிக்கும் மாணவியை அம்பேத்கர் நகரைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் கமலேஷ் கடந்த ஆண்டு காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பல முறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதில் அந்த மாணவி கர்ப்பம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த அதிர்ச்சி தகவல் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வர கமலேஷ் மீது மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். தன் மீது புகார் அளித்ததை தெரிந்து கொண்ட கமலேஷ் கடந்த ஆண்டு தலைமறைவானார்.

கமலேஷ் மீது வழக்குப்பதிந்து பல்வேறு இடங்களில் போலீசார் தேடிவந்த நிலையில் ஒரு வருடத்திற்கு பின்னர் பந்த நல்லூர் காவல் ஆய்வாளர் சுகுணா கமலேஷை கைது செய்து தஞ்சை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி கமலேஷ் சிறையில் அடைக்கப்பட்டார்.

மாணவிகள் படிக்கும் வயதில் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினால் வாழ்க்கையில் முன்னேறலாம். இதுபோன்ற கயவர்களின் வலையில் சிக்கினால் படிப்பு, வாழ்க்கை இரண்டுமே சீரழிந்துபோகும்.