கொரோனாவுக்கு ஆசைப்படும் பள்ளி மாணவர்கள்... ஏன்னு தெரியுமா?

உலகம் முழுவதும் கொரோனா நோய் குறித்து அச்சத்தில் இருக்கிறது. கொரோனா தாக்கப்பட்ட நாட்டின் பட்டியலில் இப்போது இந்தியாவும் சேர்ந்துவிட்டது. நாம், இந்தியாவில் 29 பேர் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.


குறிப்பாக இந்தியாவுக்கு வந்த இத்தாலி மக்களில் 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பதும் அதிர்ச்சி அளிக்கின்றது.

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி ஆகிய விமான நிலையங்கள் இப்போது தீவிர கட்டுப்பாட்டின்கீழ் வந்துள்ளது. ஏனென்றால் மலேசியா, சிங்கப்பூர், துபாய் ஆகிய நாடுகளிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்தவர்களில் 11 மாத குழந்தை உட்பட மூன்று பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்தக் குழந்தைக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் பல்வேறு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது. காய்ச்சல், இருமல், சளி தொடர்ச்சியாக இருந்தால் விடுமுறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து பல மாணவர்களும் நோய் பாதிப்பு இருப்பதாகச் சொல்லி வருகிறாரர்களாம். ஆக, மாணவர்களுக்கு நோய் வேண்டாம் ஆனால், லீவு வேண்டும் என்பதுதான் ஆசை.