பஸ் மீது ஏறி அடாவடி! சடன் பிரேக் போட்ட டிரைவர்! பிறகு நேர்ந்த தரமான சம்பவம்!

சென்னையில் பஸ்டே கொண்டாடி பேருந்தில் ஏறி நடனமாடிய மானவர்கள் கொத்தாக கீழே விழுந்த பரிதாபம்.


சென்னையில் பட்டபகலில் இயங்கி கொண்டிருந்த பஸ் கூரை மீது நூற்றுக்கணக்கானோர் ஆட்டம் போட்டு, ஆரவாரம் செய்தபடி வந்துக்கொண்டிருந்த போது, பேருந்து ஓட்டுநர் எதிர்ப்பாராத விதமாக பிரேக் போட, முன்னால் சென்ற பைக்கில் வந்த நபர்கள் மொத்தமாக சாலையில் பொத்தென விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி யை ஏற்படுத்தியது.

இதில் அதிர்ஷ்ட வசமாக எந்த பாதிப்பும் இல்லாமல் மாணவர்கள் தப்பித்தனர்.பேருந்தில் மாணவர்கள் ஆரவாரம் செய்து வரும் காட்சிகளை முன்னே இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் வீடியோ பதிவு செய்து வெளியிட்டதில் சமூக வலைதளத்தில் பெரும் வைரலாகி வருகிறது.மேலும், மானவர்கள் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து கண்டனக்குரல் பதிவாகி வருகிறது.