மாணவர்களின் சூப்பர்ஸ்டார் எடப்பாடிதான். குஷியில் மாணவ சமுதாயம்.

அரசியலில் சொல்வதை செய்வது மட்டுமின்றி, சொல்லாததை செய்வதுதான் பெரிது. அதைத்தான் செய்துவருகிறார் எடப்பாடி பழனிசாமி. ஆம், மாணவர்கள் உலகத்தில் இன்றைய சூப்பர்ஸ்டார் எடப்பாடி பழனிசாமிதான்.


பள்ளிக்கூடம், கல்லூரிகளை மூடிப் போட்டது மட்டுமின்றி ஆல் பாஸ் அறிவித்து அசத்தினார். அதேபோல், அரியர் மாணவர்களையும் பாஸ் செய்துவிட்டார். இதெல்லாம் போதாது என்று அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு 7.5% இட ஒதுக்கீடு கொண்டுவந்து அசத்தினார்.

இப்போது, அரசு கல்லூரி மாணவர்களுக்கு 4 மாதங்களுக்கு (ஜனவரி முதல் ஏப்ரல் வரை) இலவச டேட்டா கார்டு வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

இதன்படி இணையவழி வகுப்புகளில் மாணவர்கள் கலந்துக்கொள்ள ஏதுவாக நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்பட உள்ளது. மேலும் அரசு கல்லூரிகள், கல்வி உதவித் தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9 லட்சத்து 69 ஆயிரத்து 47 மாணவர்கள் இதன்மூலம் பயன்பெறுவர். 

எல்காட் நிறுவனம் மூலம் விலையில்லா டேட்டா கார்டுகள் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இனிமேல், மாணவர்கள் படிக்கவும் செய்யலாம், உலக விஷயங்களும் தெரிஞ்சுக்கலாம் இலவசமாகவே.