14 வயது சிறுமி கர்ப்பம்..! காரணம் 59 வயது தாத்தா..! திருவண்ணாமலையை அதிர வைக்கும் சம்பவம்!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் 9ம் வகுப்பு மாணவியை தூக்கிச்சென்று மன்மத லீலை செய்த லாரி ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனியாக நடந்து சென்ற 14 வயது சிறுமியை லாரி ஓட்டுநர் கஜேந்திரன் என்பவர் உதவுவது போல் நடித்து கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த விஷயத்தை வெளியில் சொல்லக்கூடாது என அந்த 9ம் வகுப்பு மாணவியை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே தற்போது அந்த மாணவி கர்ப்பம் தரித்துள்ளார். இந்த விஷயம் வீட்டில் தெரியவர மாணவியிடம் கேட்டுள்ளனர். அப்போதுன் தனக்கு நேர்ந்த கொடூரத்தை அவர் சொல்லி அழுதுள்ளார். இதையடுத்து பெற்றோர் கஜேந்திரன் மீது போலீசில் புகார் அளித்தனர். பின்னர் மாணவியிடமும், கஜேந்திரனிடமும் விசாரணை மேற்கொண்ட செய்யாறு அனைத்து மகளிர் போலீசார் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.