பாஜகவின் சின்மயானந்தாவும் சீரழிந்த பெண்களும்! சட்டக் கல்லூரி மாணவி வெளியிட்ட திடுக் தகவல்!

உத்திரப்பிரதேச மாநிலம், ஷாஜகான்பூரில் இருப்பது எஸ்.எஸ் சட்டக்கல்லூரி.


இந்தக் கல்லூரியை நிர்வகிப்பது முன்னாள் பிஜேபி அமைச்சரும் இன்னாள் சுவாமிகளுமான சின்மயாந்தின் ஆசிரமம்.இந்தக் கல்லூரியில் முதுநிலை சட்டம் படித்துவந்த மாணவி ஒருவர் 72 வயது சுவாமி சின்மயானந்தா தன்னை பாலியல் வன்கொடுமை செய்த்ததாகச் சொல்லி விடியோ ஒன்றை இணைய தளத்தில் வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து அந்த மாணவியின் பெற்றோர் அவர் தங்கி படித்து வந்த விடுதியில் வந்து பார்த்தபோது மாணவி அறையில் இல்லை.அவரது இரண்டு செல்ஃபோன்களும் அனைத்து வைக்கப்பட்டு இருந்தன.அதனால்,அச்சமடைந்த மாணவியின் பெற்றோர் ஷாஜகான்பூர் காவல்யுறையில் புகார் அளித்தனர்.

இது முழுவதுமே தன்னை பிளாக் மெயில் செய்வதற்கான நாடகம் என்று சொன்ன சின்மயானந்தா,சிலர் தன்னை 5 கோடி ரூபாய் கேட்டு மிரட்டுவதாக காவல் துறையில் புகார் அளித்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் தலையிட்டு மாணவியை தேட தனிப்படை அமைக்கவும்,அவரது குடும்பத்துக்கு பாதுகாப்புத் தரவும் உத்தரவிட்டது.அதைத் தொடர்ந்து ஷாஜஹான்பூர் போலீஸ் அமைத்த தனிப்படை காணமல் போன சட்டக்கல்லூரி முதுகலை மாணவியையும் அவரது நண்பர் ஒருவரும் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்ததைக் கண்டுபிடித்து அழைத்து வந்தனர்.

அந்த மாணவி நேற்று ஷாஜகான்பூரில் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.அப்போது,சின்மயானந்தா என்னை பலாத்காரம் செய்தார்.ஓராண்டு காலத்துக்கு மேலாக எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.இந்தக் குற்றச்சாட்டு தொடர்பான வீடியோ உட்பட அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளன.

அவர் என்னைப்போலவே பலமாணவிகளின் வாழ்க்கையைச் சீரழித்திருக்கிறார்.என்று கடுமையான குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார்.இது குறித்து சின்மயானந்தாவின் வக்கீல் பேசும் போது ' இது போலியான குற்றச்சாட்டு, மாணவி 5 கோடி கேட்டு மிரட்டுகிறார்' என்றார்.