இன்று தி.மு.க.வினர் நடத்திய பொதுக்குழுவில் ஒருசில முக்கிய தீர்மானங்கள் நிறைவேறியது. பொதுச்செயலாளர், பொருளாளர் போன்ற பதவிகளிலும், மாவட்டச் செயலாளர்களும் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.
அன்பழகன் பதவியை அபகரித்துக்கொண்டார் ஸ்டாலின்! பொதுக்குழு தீர்மானத்தில் திடுக்!
ஆனால், உள்ளாட்சித்தேர்தல் நடைபெறும் வரை தற்போதைய நிர்வாகிகள் அதே பொறுப்பில் நீடிக்க அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, தி.மு.க. அமைப்புத்தேர்தலை அடுத்த ஆண்டுக்குள் நடத்தி முடித்தல், இணைய தளம் மூலம் தி.மு.க. உறுப்பினர்களை சேர்க்கும் வகையில் கட்சி விதியில் திருத்தம் செய்யவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல் வெளிநாடுவாழ் இந்தியர்களை தி.மு.க.வில் உறுப்பினர்களாக சேர்க்க கட்சி விதிகளில் திருத்தம் செய்யவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், வாக்குச்சாவடிக்கு 10 பேர் கொண்ட உட்குழு அமைக்கப்படும். தி.மு.க. இளைஞரணி உறுப்பினர்களுக்கான வயது வரம்பு 18 முதல் 35 வரை நிர்ணயித்து கட்சி விதிகளில் திருத்தம் செய்தல், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க வலியுறுத்தல், தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வுகாண வலியுறுத்தல் உள்ளிட்ட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, இனி பொதுச்செயலாளருக்குப் பதிலாக கட்சித் தலைவரே கழக சட்ட திட்டங்கள் மற்றும் முடிவுகள் அறிவிப்பார் என்று அதிகாரம் கொடுக்கப்பட்டது.
அதாவது, இப்போது பொதுச்செயலாளராக இருக்கும் அன்பழகன் செயல்பட முடியாமல் இருப்பதால், இனிமேல் கட்சி சம்பந்தப்பட்ட அனைத்து செயல்பாடுகளும் ஸ்டாலின் பெயரில்தான் வெளியாகும். அதாவது பொதுச்செயலாளர் இப்போதும் அன்பழகன் என்பது சரிதான், ஆனால், அவர் பொதுச்செயலாளர் இல்லை.