திமுக எம்எல்ஏவை விரட்டி விரட்டி கடித்த தெரு நாய்! காரணம் என்ன தெரியுமா?

கூடலூரில் எம்எல்ஏவை தெருநாய் ஒன்று கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்தவர் திராவிடமணி. இவர் திமுகவின் எம்எல்ஏ ஆவார். தமிழகத்தின் மற்ற பகுதிகளை விட கூடலூர் பகுதியில் திமுகவின் பலம் எப்பொழுதும் ஓங்கியிருக்கும். திராவிடமணி நீலகிரி மாவட்டத்தின் பந்தளூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த தேயிலை தோட்டத் தொழிலாளியின் மகன் ஆவார்.

இவர் எம்எல்ஏ ஆவதற்கு முன் அப்பகுதியில் வழக்கறிஞராகவும் பணியாற்றி வந்துள்ளார். இவர் தினந்தோறும் காலையில் எழுந்து வாக்கிங் சென்று வருவது வழக்கம். அந்த வகையில் ஒவ்வொரு முறையும் வாக்கிங் செல்லும் பொழுதும் வீடு திரும்பும் போதும் தனது தொகுதி மக்களை நேரில் சென்று பார்த்து பேசுவார்.

இந்நிலையில் இன்று காலை வாக்கிங் செல்லும் பொழுது அவரை ஒரு தெருநாய் ஒன்று பார்த்து விரட்டத் தொடங்கியது. இதைப் பார்த்து அவர் வேகமாக நடக்க நாய் அவர் மீது பாய்ந்து அவரது தொடை பகுதியை கடித்து குதறியது. இதனால் அவர் தொடையில் இருந்து ரத்தம் கொட்ட அவர் கதறி அழுதார். பின் அக்கம் பக்கத்தினர் நாயை விரட்டி அவரை பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் .

பின் அங்கு அவருக்கு வெறி நாய்க்கடி தடுப்பூசி போடப்பட்டது. ஏற்கனவே அப்பகுதியில் நாய் தொல்லை அதிகமாக இருப்பதாக புகார்கள் எழுந்த நிலையில் தற்போது எம்எல்ஏவை தெரு நாய் கடித்து குதறிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.