சுடுகாட்டில் எரியும் பிணத்தை தின்ற கொடூர மனிதன்! நெல்லையில் பதற்றம்!

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள சிவகிரி தாலூகாவுக்கு உட்பட்ட டி.ராமநாதபுரத்தில் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த முருகேஷன்.


இவருக்கு திருமணம் முடிந்து மனைவியும், ஒரு மகளும், மகனும் உள்ளனர். முருகேஷன்க்கு கஞ்சா, மது குடிக்கும் பழக்கம் உண்டு. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு. 

தற்போது 2 குழந்தைகளுடன் பிரிந்து வாழ்ந்து வருகின்றார் அவரின் மனைவி .

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அங்குள்ள சுடுகாட்டில் எரியும் பிணங்களை யாரோ ஒரு மர்ம நபர்  தின்று செல்வதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் கிராமத்து மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்த நிலையில் கிராமத்தில் ஒரு மூதாட்டி இறந்த நிலையில் உறவினர்கள் தகனம் செய்து விட்டு திரும்பி உள்ளனர்.

இதனை தொடர்ந்து இறந்து போனவர்களின் உடல்லை சாப்பிடும் மர்ம நபர் யார் என தெரிய வேண்டும் என நினைத்த அப் பகுதி வாசிகள் இரவு சுடுகாட்டில் காத்திருந்த வேளையில் பிணம் எரிந்து கொண்டிருந்த போது அங்கு வந்த முருகேஷன் கையில் அருவாள்ளோடு எரிந்து கொண்டிருந்த சடலத்தை கம்பால் விலக்கி கையில் வைத்திருந்த அருவாளால் வெட்டி சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

அப்போது மறைந்திருந்தவர்கள் குரல் எழுப்பி கற்களால் எரிந்துள்ளதாகவும் பின்னர் அவன் ஓடியதாகவும் கூறுகின்றனர். 

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கிராமத்து மக்கள் இது குறித்து வாசுதேவநல்லூர் காவல் நிலையத்திற்க்கு தகவல் கொடுத்ததின் பெயரில் முருகேஷனை பிடித்து சென்னை கீழ்பாக்கம் மன நல மருத்துவமனைக்கு போலிசார் அனுப்பி வைத்தனர்.