50 வயதில் 2வது திருமணம் செய்த தாய்..! பிறகு நேர்ந்த துர் மரணம்..! தண்டவாளத்தில் சடலமாக கிடந்த மகன்! உலுக்கி எடுக்கும் பகீர் சம்பவம்!

டெல்லி: கணவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், விரக்தியில் இருந்து வந்த அவரது மனைவியும், மகனும் தற்கொலை செய்துகொண்டனர்.


டெல்லியில் உள்ள கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர் ஆலன் ஸ்டான்லி. 27 வயதாகும்  இவர் தனது தாய் லிஸி உடன் வசித்து வந்தார். இந்நிலையில் திடீரென கடந்த சனிக்கிழமை ரயில் தண்டவாளத்தில் விழுந்து  ஆலன் தற்கொலை செய்துகொண்டார். அதேபோல, அவரது தாய் லிஸி வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இருவரும்  ஒரே நேரத்தில் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தவே போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.  

இதன்படி, ஆலனின் தாய் லிஸி சமீபத்தில்தான் ஜான் என்பவரை 2வது திருமணம் செய்திருக்கிறார். அவரது முதல் கணவர் இறந்துவிட்டதால், 2வது திருமணம் செய்திருக்கிறார். ஆனால், அந்த 2வது கணவரும் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஆலன் மற்றும் லிஸிதான் காரணம் எனக் கூறி ஜானின் முதல் மனைவியின் குடும்பத்தினர் போலீசில் புகார் செய்துள்ளனர். இதன்பேரில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் காணப்பட்ட ஆலன், தனது தாய் லிஸியுடன் சேர்ந்து தற்கொலை செய்ய தீர்மானித்திருக்கிறார்.  

தனக்கு தொடர்ந்து ஜானின் முதல் மனைவி குடும்பத்தினர் தொல்லை அளித்து வருவதாக, நெருங்கிய நட்புகளிடம் ஆலன் கூறியிருக்கிறார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை லிஸியும், ஆலனும் வெவ்வேறு இடங்களில் தற்கொலை செய்து இறந்துகிடந்துள்ளனர். ஒருவேளை ஆலன், தனது தாயை கொன்றுவிட்டு, பின்னர் தற்கொலை செய்திருக்கலாமோ என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர்.