மனைவியின் மகள்களான இரண்டு சிறுமிகளை 5 ஆண்டுகள் பாலியல் பலாத்காரம் செய்த கேடுகெட்ட மாற்றாந் தந்தை ஆயுள் தண்டனை பெற்றுள்ளான்.
மனைவியின் மகள்கள் 2 பேருடன் 5 ஆண்டுகளாக கணவன் தகாத உறவு! கண்டுபிடித்த பிறகு நிகழ்ந்த தரமான சம்பவம்!

மும்பை மாஹிம் பகுதியைச் சேர்ந்தவன் நாராயண் யாதவ் என்ற சமீர் கான் இவன் அந்தச் சிறுமிகளின் தாயை கடந்த 2011-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அப்போது அந்தப் பெண்ணின் மூத்த மகளுக்கு 12 வயதும் 2-வது மகளுக்கு 10 வயதுமாக இருந்தது.
இந்நிலையில் நாராயண் தன் மனைவி வெளியில் சென்றிருக்கு போதும் பக்கத்து அறையில் உறங்கும் போதும், சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், வெளியில் சொன்னால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் மிரட்டி வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2016 -ஆம் ஆண்டில் ஒரு நாள் அந்தச் சிறுமிகளின் தாய் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றிருந்த போது அவர்களது உறவுக் காரப் பெண் ஒருவர் வீட்டுக்கு வந்ததாகவும் உட்புறமாக தாழிடப்பட்டிருந்த கதவை தட்டியும் திறக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
அதனை அடுத்து அவர் சாவித் துவாரம் வழியாக பார்த்த போது நாராயண் சிறுமிகள் இருவரில் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துகொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அனைத்து உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்த அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து சிறுமிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவன் தங்கள் இருவரையும் கடந்த 5 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாகத் தெரிவித்தனர். சிறுமிகள் மற்றும் நாராயணின் ஆடைகளை சோதித்தும், பல்வேறு மருத்துவ சோதனைகளை மேற்கொண்டும் மருத்துவர்கள் அளித்த அறிக்கை உள்ளிட்ட பல ஆதாரங்களைக் கொண்டு போலீசார் நாராயணை குற்றவாளி என நிரூபித்தனர்.
இதையடுத்து அவனுக்கு போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆயுள் தண்டனையும் 6 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.