சென்னை : சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேலை ஐகோர்ட் நியமித்தது சரிதான் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சிலை கடத்தல் வழக்குகளை பொன் மாணிக்கவேல் தொடர்ந்து விசாரிக்கலாம்! ஆனால்...! உச்சநீதிமன்றத்தில் புது ட்விஸ்ட்!

சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன். மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்.
பொன். மாணிக்கவேலை சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரியாக ஓராண்டுக்கு நியமனம் செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஆனால் பொன். மாணிக்கவேல் நியமனத்தை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது.
பணி ஒய்வு பெற்ற பொன். மாணிக்கவேலை அதிகாரியாக நியமித்ததற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கன்வில்கர், கே.எம்.ஜோசப் அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில் பொன் மாணிக்கவேல் விசாரணையை துவங்கலாம் என்றும் ஆனால் யாரையும் கைது செய்ய கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது