கட்சியில் சேர்வதால் தான் பாத்திமாவுக்கு பிக்பாஸ் வாய்ப்பு! கமல் டிவி ஆகும் விஜய் டிவி!

தமிழகத்தின் தண்ணீர் பிரச்னையை பின்னுக்குத் தள்ளி, நாட்டின் மிக முக்கியமான பிரச்னையாக கமல்ஹாசனின் பிக்பாஸ் மூன்றாவது சீசன் ஆரம்பமாகிவிட்டது.


இதுவரை விஜய் டி.வி.க்காக இந்த நிகழ்ச்சியை நடத்திவந்தார் கமல். ஆனால், இப்போது தனது மக்கள் நீதி மய்யம் கட்சிக்காகத்தான் நிகழ்ச்சி நடத்துகிறாராம்.

கமல்ஹாசன் நடத்தும் மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினராக சேர்வதற்கு சம்மதம் தெரிவித்த காரணத்தினாலே பாத்திமா பாபு இந்த பிக்பாஸ் போட்டியில் இறக்கிவிடப்பட்டாராம். கடந்த முறை சினேகன் பிக்பாஸ் மூலம் கமலுக்கு நெருக்கமாகி கட்சியிலும் முக்கிய இடம் பிடித்தார்.

அதேபோன்று இந்த முறை இயக்குனர் சேரன் இருப்பாராம். கமலுக்கு பிடித்தமான வகையில் பேசி, ம.நீ.ம.ய்யத்துக்கு பிக்பாஸ் மூலம் ஆள் சேர்க்கப் போகிறாராம் சேரன். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் பாத்திமா பாபு, சேரன் இருவருமே கட்சியில் சேர்ந்துவிடுவார்கள்.

இவர்களை பொதுமக்களிடம் இன்னமும் பெரிய அளவில் பிரபலப்படுத்தி கட்சியில் சேர்த்துக்கொள்வதாக ஏற்கெனவே கமல் இருவருக்கும் பிராமிஸ் பண்ணியிருக்கிறாராம்.

தன்னுடைய சொந்தப் பணம் போட்டு மக்கள் நீதி மய்யத்தை வளர்க்க வேண்டிய அவசியம் கமலுக்கு இல்லை என்பதுதான் இப்போது உண்மை. ஏனென்றால், இப்போ விஜய் டி.வி. கமலுடைய சொத்தாகிவிட்டது. தினமும் கமலுக்காக பாடுபடும். அது போதுமே...