டாஸ்மாக்கை மூடுங்கள்! மனைவியின் சடலத்துடன் ரோட்டில் அமர்ந்த அப்பாவி டாக்டர்! ஏன் தெரியுமா?

5 மணி நேரமாக நடுரோடில் மனைவியின் பிணத்துடன் போராடிய டாக்டர்..


ஆனைகட்டி பகுதியிலுள்ள மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு பெற்றவர். டாக்டர் ரமேஷ் காரணம் தனது மருத்துவத்தை பணத்திற்காக விற்காமல் உண்மையாகவே அதை சேவையாக கருதி செயல்பட்டு வருபவர். இவர் ஒரு மக்கள் மருத்துவர்.

இவரது ஒரே மகளான சகுந்தலா ஆனைகட்டியில் உள்ள வித்யா வனம் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி முடிந்து இரு சக்கர வாகனத்தில் அவரது அம்மாவுடன் வீட்டிற்கு திரும்பும் போது பள்ளியிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் சென்று கொண்டிருக்கும் பொழுது எதிரே மிக வேகமாக வந்த மற்றொரு இரு சக்கர வாகனத்தின் சத்தத்தைக் கேட்டு ஓரமாக வண்டியை நிறுத்தியிருக்கிறார்.

மது போதையில் ஒரே வாகனத்தில் 3 பேராக வந்தவர்கள் நேராக வந்து இடித்ததில் அதே இடத்தில் டாக்டர் .ரமேஷின் மனைவி ஷோபனா இறந்து விட்டார். அவரது மகள் சகுந்தலா காலில் எழும்பு முறிவு ஏற்பட்டு கோவை கங்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதைக் கண்ட பொதுமக்கள் மதுக்கடையை அகற்றக் கோரி டாக்டர் ரமேஷுடன் சுமார் 5 மணி நேரமாக சாலையை மறித்து தர்ணா செய்தனர். மதுக்கடையை மூட வழிவகை செய்வதாக அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதியை நம்பி போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.  

டாக்டரின்  மகள் அந்த விபத்தில் கால் எலும்பு முறிந்து மருத்துவமனையில் கிடக்கிறாள். தன் தாய் இறந்தது அவளுக்கு இந்த நிமிடம் வரை தெரியாது. அந்தக் குடும்பம் செய்த தவறு என்ன ? 

சரக்கடித்து வண்டியில் சாகசம் செய்யும் பொறுக்கிகளை எங்கு பார்த்தாலும் காவலர்களிடம் பிடித்து ஒப்படைக்கும் பணியை பொதுமக்கள் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற கொடூரத்தைப் பார்க்கும் நிலைமை பிள்ளைகளுக்கு நிகழாது.