பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு… ஸ்டாலின் டென்ஷன்

எந்தவொரு மத வழிபாட்டுத் தலத்தையும் அழிப்பது அநியாயம்! சட்டவிரோதம் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


‘தொழுகை நடத்தும் இடத்தை அழிக்கும் நோக்கத்துடன், மொத்த மசூதியும் திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் இடித்துத் தள்ளப்பட்டுள்ளது’ என உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்த பின்னரும், சி.பி.ஐ. அதனை நிரூபிக்கத் தவறி இருப்பது இந்திய நாட்டின் சட்டத்தின் ஆட்சிக்கு ஏற்பட்ட தலைகுனிவு!

அரசியல் சட்டத்திற்கு நெருக்கடி தந்த பாபர் மசூதி வழக்கில் நடுநிலையாகச் செயல்பட்டிருக்க வேண்டிய சி.பி.ஐ., பா.ஜ.க.அரசின் கூண்டுக்கிளியாகி, கடமை துறந்து, தோற்றிருப்பது நீதியின் பாதையில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறியிருக்கிறார்.