ஸ்டாலின் சரண்டர்..! 200 சீட்களில் தி.மு.க. நிற்கவில்லை என்று கூட்டணிக் கட்சிகளுக்கு வெள்ளைக் கொடி.

அரசியல் பேராசைக்கும் தி.மு.க.வுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 சீட்களில் நிற்க தி.மு.க. விரும்புகிறது என்று செய்திகள் பரபரப்பாக வெளியாகின.


அதனால், கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் டெரர் ஆனது. ம.தி.மு.க.,விடுதலை சிறுத்தைகள் உள்ளீட்ட கட்சிகள் திசை மாறுவதற்கு தருணம் பார்த்தன. ஆகவே, சுதாரித்துக்கொண்ட ஸ்டாலின், இன்று ஒரு சமாதான அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, ‘‘200 தொகுதிகளுக்குமேல் தி.மு.க. போட்டியிடப் போகிறது என்று ஓர் அனுமானத்தை மய்யமாக வைத்து விவாதிக்கிறார்கள். தேர்தல் அறிவுப்பு வெளியாகி கூட்டணிக் கட்சிகள் ஒருமுறை அல்ல; இரண்டு, மூன்று முறை அமர்ந்து பேசி, போட்டியிடப் போகும் தொகுதிகள் இறுதி செய்யப்படுவதுதான் வாடிக்கை. அதற்குள் ஏன் இவ்வளவு அவசரப்படுகிறார்கள் என்று தெரியவில்லை; இவையெல்லாம் விவாதத்திற்கான பொருளே அல்ல.

தி.மு.க. எத்தனை தொகுதிகளில் போட்டியிடப் போகிறது என்பதை அதிகாரப்பூர்வமாக முடிவெடுத்து அறிவிப்பதற்கு பல மாதங்களுக்கு முன்பே, 200 தொகுதிகளில் போட்டியிடப் போகிறது என்ற அனுமானமும், அதன் தொடர்பான விவாதங்களும், தேவையற்றவை மட்டுமல்ல; உள்நோக்கம் கொண்டவையும் ஆகும் என்று தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

கூட்டணியின் பாதையும், பயணமும், தெளிவும், திட்பமும் வாய்ந்தவை; எவராலும் அதன் கவனம் சிந்தாது, சிதறாது. அதீதமான கற்பனை மற்றும் அளவில்லாத யூகத்தின் அடிப்படையில் எதையாவது சொல்லி, வலிவுடனும், பொலிவுடனும் திகழும் கழகக் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தலாம் என எத்தனிப்பவர்கள் கடைசியில் கலகலத்துப் போவார்கள்!

கழகக் கூட்டணியை அந்த சக்திகளால் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது. வெற்றிக் கூட்டணியாம் கழகக் கூட்டணியின் பாதையும், பயணமும், தெளிவும், திட்பமும் வாய்ந்தவை; எவராலும் அதன் கவனம் சிந்தாது, சிதறாது. என்று தெரிவித்துள்ளார். எப்படியோ ஸ்டாலின் சரண்டர் என்பதுதான் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆனந்த செய்தி.