பாரதப்பிரதமருக்கு ஒரு கடித்ததை தட்டிவிட்டுள்ளார் ஸ்டாலின்! ஆக்டிவ் பாலிடிக்ஸ் செய்றாராம்.

லோக்கல் அமைச்சர்களுடன் அறிக்கை போர் நடத்தி அலுத்துப்போய் விட்டதாலோ என்னவோ, இன்று பாரதப்பிரதமருக்கு ஒரு கடித்ததை தட்டிவிட்டுள்ளார் ஸ்டாலின்.


அந்த கடிதத்தில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரிமிலேயர் பிரிவினரைக் கணக்கிடுவதற்கான ஒரு கூறாகச் சம்பளத்தைச் சேர்ப்பது குறித்த விவாதத்தைத் திரும்பப் பெறவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

இடஒதுக்கீடு தொடர்பான விவகாரங்களுக்கு மாநில அரசுகளின் நடவடிக்கை தேவைப்படுவதாலும், இம்முடிவு நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களைக் கடுமையாகப் பாதிக்கும் என்பதாலும், குறிப்பாக இத்தகைய நெருக்கடியான நேரத்தில் இம்முடிவினை திரும்பபெற்று இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்குமாறு கேட்டுள்ளார்.

அதேபோன்று, மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்யவேண்டும் என்றும் ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அத்துடன், மருத்துவப் படிப்புகள் இளங்கலை முதுகலை மற்றும் பட்டயப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கான (நீட்) தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். 

நீட் தேர்வு நடத்தப்படும் கடந்த 3 ஆண்டுகளாக இத்தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெறவும் தேர்வு பெறுவதற்காகவும் தனியார் பயிற்சிக் கூடங்களை மாணவர்கள் நாட வேண்டியுள்ளது வெளிப்படையான ஒன்று. இந்த தனியார் பயிற்சி மையங்களில் கட்டணம் அதிகம் என்பதால் மாநிலங்களிலுள்ள பல மாணவர்களால் பயிற்சி பெற முடியாது.

எனவே, தொற்றுநோயினால் நாடு இத்தகைய ஆபத்தான சூழலில் இருக்கும் ஏற்கனவே நிலவிவரும் ஏற்றத்தாழ்வுகள் நீடிப்பதற்கும் அல்லது அதிகரிப்பதற்குமான கொள்கை முடிவுகளைத் தொடர்வது நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.