மோடியை எதிர்த்து ஜெயித்த உத்தவ் தாக்கரேக்கும் சரத் பவாருக்கும் ஸ்டாலின் சல்யூட்!

இந்தியாவிலேயே மோடியை எதிர்த்து ஜெயித்த ஒரே நபர் என்று ஸ்டாலின் மட்டும்தான் இருந்தார்.


இப்போது அவருக்குத் துணையாக சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரேயும், தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரும் வந்திருக்கின்றனர். அவர்களுக்கு இன்று ஸ்டாலின் போனில் பேசியதுடன் நில்லாமல் வாழ்த்து செய்தி அனுப்பி வைத்திருக்கிறார். 

உத்தவ் தாக்கரே அவர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலக் கட்சியின் தலைவர் ஒருவர் முதலமைச்சராவதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். எதிர்ப்பட்ட தடைகளை எல்லாம் உடைத்து வெற்றி பெற்றுள்ளீர்கள். தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவீர்கள் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோன்று சரத் பவாருக்கு அனுப்பியிருக்கும் வாழ்த்து செய்தியில், மகாராஷ்ட்டிரத்தில் நிலையான ஆட்சியை அமைத்ததற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். எதிர்க்கட்சியினரின் ஒற்றுமைக்கு அடையாளமாக நீங்கள் திகழ்கிறீர்கள். ஜனநாயகம் துடிப்பாக இயங்கவும், அரசியலமைப்புச் சட்டமும் நாடும் வலிமையாக இருக்கவும் இந்த ஒற்றுமை தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.