போகாதீங்க ராகுல்! ப்ளீஸ்! ஸ்டாலின் கெஞ்சுவது ஏன் தெரியுமா?

சொன்னா சொன்னதுதான், நான் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்யப் போகிறேன் என்று பிடிவாதமாக இருக்கிறார் ராகுல் காந்தி. அவரை சமாதானப்படுத்த வேண்டிய சோனியா காந்தி, அமைதியாக இருக்கிறார். இன்னும் சொல்லப்போனால், இப்போதைக்கு ராகுலுக்கு ஓய்வு தேவை என்று நினைக்கிறார்.


பிரியங்கா காந்தி தொடங்கி ப.சிதம்பரம் வரையிலான தலைவர்கள் அனைவரும், ராகுல் கட்சித் தலைவர் பதவியைவிட்டு போய்விடக் கூடாது என்று கெஞ்சிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் காங்கிரஸ்காரர்கள். அதனால் கெஞ்சுவது தவறு என்று சொல்ல முடியாது.

ஆனால், வேறு கட்சியில் இருந்து ஒருவர் கெஞ்சுகிறார் என்றால், அது ஸ்டாலின் மட்டும்தான். ஆம், இன்று தொலைபேசியில் ராகுலுக்குப் பேசிய ஸ்டாலின், எந்தக் காரணம் கொண்டும் ராஜினாமா முடிவு எடுத்துவிட வேண்டாம் என்று கெஞ்சியிருக்கிறார். 

ராகுல் இல்லையென்றால், காங்கிரஸ் கட்சிக்கு மதிப்பும் மரியாதையும் கிடையாது என்று நினைக்கும் ஸ்டாலின், கட்சியில் ப.சிதம்பரம் கை ஓங்கிவிடும் என்று நினைக்கிறார். மேலும், இப்போது கிடைத்திருக்கும் வெற்றியில் ராகுலுக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. அதனால், வரும் சட்டசபைத் தேர்தல் வரையிலாவது ராகுல் வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

ராகுல் இல்லாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு வைத்து, சட்டசபை அல்லது உள்ளாட்சித் தேர்தலை சந்தித்தால் நிச்சயம் தோல்விதான் ஏற்படும் என்று தெரிந்துதான் அலறுகிறாராம் ஸ்டாலின். அவரவர் கவலை அவரவர்க்கு.