திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு முட்டாள் என்று ஆதாரங்களுடன் கூறி தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் அதிர வைத்துள்ளார்.
ஸ்டாலின் ஒரு முட்டாள்! ஆதாரங்களை அடுக்கி தெறிக்கவிட்ட சின்ன கேப்டன்!

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அவர்களை ஆதரித்து விஜய பிரபாகரன் பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் வேலூரில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏசி சண்முகத்தை ஆதரித்து விஜய பிரபாகரன் பிரச்சாரம் செய்தார்.
அப்போது விஜய பிரபாகரன் பேசியதாவது:- தற்போது வேலூர்
மாவட்டம் இந்திய அளவில் பிரபலம் ஆகியுள்ளது. அதற்கு யார் காரணம் என்று
உங்களுக்குத் தெரியும். ஆட்சியில் இல்லை என்றாலும் கூட திமுகவினர் வீட்டில்
இருந்து மூட்டை மூட்டையாக பணத்தை எடுக்கிறார்கள்.
மடியில்
கனமில்லை அதனால் பயம் இல்லை என்கிறார் ஸ்டாலின். ஆனால் ஸ்டாலின் உடம்பு
முழுவதும் கணம் தான். அதனால்தான் திமுகவினர் வீட்டில் இருந்து மூட்டை
மூட்டையாக பணம் சிக்குகிறது. கேப்டனை பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று
துரைமுருகனை எச்சரித்தோம். ஆனால் அவர் கேட்கவில்லை. கேப்டனுக்கு தொட்டதால்
துரைமுருகன் தற்போது கேட்டுள்ளார்.
ஸ்டாலினைப்
பற்றி என்னிடம் சிலர் கேட்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை ஸ்டாலின் ஒரு
உலரும் புகார் பெட்டி. ஏனென்றால் எதற்கெடுத்தாலும் புகார் கூறி எதிர்ப்பு
தெரிவித்து வருகிறார். எல்லாவற்றையும் எதிர்ப்பவர்களை முட்டாள் என்று
கூறுவார்கள். அந்த வகையில் அனைத்தையும் எதிர்க்கும் ஸ்டாலின் யார் என்று
நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
இவ்வாறு விஜய பிரபாகரன் பேசினார்.