பொறுமைக்கும் எல்லை உண்டு… இன்னமும் முடிவு எடுக்கவில்லை. அக்னி அழகிரி… அச்சத்தில் ஸ்டாலின்.

இனியும் கெஞ்சிக்கொண்டு இருந்தால் காரியம் நடக்காது என்று அழகிரி முடிவுசெய்து, அடுத்தகட்ட நகர்வுக்குப் போயிருப்பது தி.மு.க. கூடாரத்தை முக்கியமாக ஸ்டாலினை கடும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.


எப்படியாவது முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிட வேண்டும் என்பதுதான் ஸ்டாலினின் லட்சியக் கனவு. கருணாநிதி பதவியில் இருந்த நேரத்தில், அந்த பதவியில் ஸ்டாலினை உட்காரவிடாமல் பார்த்துக்கொண்டார். அதன்பிறகு மக்கள் அவருக்கு வாக்களிக்கத் தயாராக இல்லை.

வரும் தேர்தலில் பலமான கூட்டணி இருப்பதால், நிச்சயம் முதல்வர் நாற்காலியில் உட்கார்துவிடலாம் என்று ஸ்டாலின் கணக்குப் போட்டு காத்திருக்க, அதற்கு ஆப்பு வைக்கும் வேலையில் இறங்கிவிட்டார் அழகிரி.

ஆம், இனியும் தி.மு.க.விற்கு தூதுபோகும் எண்ணம் இல்லை என்பதில் உறுதியாக இருக்கும் அழகிரி, தன்னுடைய ஆதரவாளர்களிடம் பேசிவிட்டு தனிக்கட்சி தொடங்குவதில் ஆர்வமாக இருக்கிறார். அதேநேரம், அவரை பா.ஜ.க.வில் சேர்க்க வேண்டும் என்பதில் அந்த கட்சியினர் ஆர்வமாக இருக்கின்றனர். அதேநேரம், ரஜினி தொடங்கும் கட்சியில் அழகிரி இணையவேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் விரும்புகிறார்கள்.

இந்த நிலையில், இதுவரை அரசியல் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அழகிரி கூறியிருக்கும் விவகாரம், அவரது பதுங்கலையே காட்டுகிறது என்கிறார்.