திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு நாள் ஜனாதிபதி ஆவார் என்று அக்கட்சியின் பொருளாளர் கூறியுள்ளார்.
ஸ்டாலின் தான் அடுத்த ஜனாதிபதி! திமுகவினருக்கே பீதி கிளப்பும் துரைமுருகன்!

ஒட்டப்பிடாரம் இடைத்தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி ஸ்பிக் நகரில் திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் பங்கேற்றார்.
கூட்டத்தில் துரைமுருகன் பேசியதாவது: ஸ்டாலினுக்கு இணையான அரசியல் தலைவர் தமிழகத்தில் இல்லை. தற்போதைக்கு தமிழகத்தின் தன்னிகரற்ற தலைவன் ஸ்டாலின் மட்டும் தான்.
ஸ்டாலினை தற்போதுள்ள எந்த தலைவர்களோடும் ஒப்பிட முடியாது. ஸ்டாலின் தனித்துவமான தலைவர். திமுகவிற்கு மட்டும் அல்ல தமிழகத்திற்காக ஓயாமல் உழைக்கிறார் ஸ்டாலின். விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும்.
மே 23க்கு பிறகு மத்தியிலும் ஆட்சி மாற்றம் வரும். ஆட்சி மாற்றத்திற்கு ஸ்டாலின் மிக முக்கிய காரணமாக இருப்பார். விரைவில் அவர் தமிழக முதலமைச்சர் ஆவார். அதன் பிறகு ஸ்டாலின் ஜனாபதியாகவும் ஆவார்.
அடுத்த 25 ஆண்டுகளில் ஸ்டாலின் இந்திய ஜனாதிபதி ஆவது உறுதி. இவ்வாறு துரைமுருகன் பேசினார். ஆனால் துரைமுருகன் சீரியசாகத்தான் இப்படி பேசினாரா? இல்லை நக்கல் அடித்தாரா என திமுக தொண்டர்களே கிசுகிசுத்துவிட்டு சென்றனர்.